லண்டன் : ‘உலகத்தை படைத்தது நிச்சயம் கடவுளல்ல; இயற்கை தனக்கு தானே படைத்துக் கொண்டதுதான் உலகம்’’ என்று இங்கிலாந்து இயற்பியல் விஞ்ஞானி ஹாகிங் தெரிவித்துள்ளார். அண்ட சராசரம் பற்றி ஆராய்ந்து புத்தகம் எழுதுவதில் அவர் பிரபலம். 1988ல் அவர் எழுதிய ‘அ ப்ரீப் ஹிஸ்ட்ரி ஆப் டைம்’ என்ற ஆராய்ச்சி புத்தகம் சர்வதேச அளவில் விற்பனையில் சக்கை போடு போட்டது. இப்போது அவர் ‘தி கிராண்ட் டிசைன்’ என்ற புத்தகத்தை விரைவில் வெளியிடுகிறார். அதில் இடம்பெற்றுள்ள சில அம்சங்களை லண்டனைச் சேர்ந்த ‘தி டைம்ஸ்’ நாளிதழ் வெளியிட்டுள்ளது.
புத்தகத்தில் ஸ்டீபன் ஹாகிங் கூறியிருப்பதாவது: புவி ஈர்ப்பு தத்துவத்தை சர் ஐசக் நியூட்டன் வெளியிட்டார். அதுதான் அண்டவெளியின் ஆதாரம். ஈர்ப்பு சக்திதான் உலகை தாங்கிப் பிடிக்கிறது. அதன் தொடர்ச்சியில்தான் உலகம் உருவானது. புவியீர்ப்பு விதியின்படிதான் உலகம் நிலைத்திருக்கிறது. அதே விதிப்படிதான் தன்னைத் தானே அது படைத்துக் கொண்டிருக்க முடியும். அறிவியல்ரீதியாக உலகைப் பார்ப்பவர்களுக்கு, அறிவியலை புரிந்து கொண்டவர்களுக்கு அதை உருவாக்கியதில் இறைவனின் ஐடியா இருப்பதாக நம்ப வேண்டிய அவசியம் இருந்ததில்லை, இருப்பதில்லை என்று புத்தகத்தில் ஸ்டீபன் ஹாகிங் கூறியுள்ளார். அறிவியல் ஆராய்ச்சியில் டிவி நிகழ்ச்சிகள், டாக்குமென்டரிகளில் உலக புகழ்பெற்றவர் ஹாகிங்.

5 comments:
அய்யோ அப்ப கடவுளே இல்லையா?
mm ok ok..
// அதே விதிப்படிதான் தன்னைத் தானே அது படைத்துக் கொண்டிருக்க முடியும்.// :)
மனிதனின் உன்னதமான படைப்பு கடவுள்- ராபர்ட் இங்கர்சால்.
God is the noblest creation of man- Robert Ingersol
நீங்க இதையெல்லாம் சொல்றதால மட்டும் நம்ம மக்கள் சாமிக்கு கிடா வெட்றத நிறுத்திட போராங்களா என்ன..
இதுக்கெல்லாம் பெரியார் தாங்க கரெக்டான ஆளு.
http://eyesnotlies.blogspot.com
அப்படியே இங்கயும் வந்துட்டு போங்க
Post a Comment