லண்டன்: 1500 பேருடன் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதைந்த முன்பாகத்தினை கனடாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து புகைப்படம், வீடியோ படமும் எடுத்துள்ளனர். உலக முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுச் சம்பவங்களில் டைட்டானிக் கப்பல் கடலில் முழ்கிய சம்பவம் ஒன்று . கடந்த 1912-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி நள்ளிரவில் 2200பேருடன் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த டைட்டானிக் எனும் சொகுசு கப்பல் அட்லாண்டிக் கடலில் பனிமலையில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பயணம்செய்த 1600 பேர் பலியாயினர். இந்நிலையில் லண்டனிலிருந்து வெளிவரும் டெய்லி மெயில் எனும் பத்திரிகையில் கூறியிருப்பதாவது: கனடாவின் ஆர்.எம்.எஸ். இன் என்ற அமைப்பும், அமெரிக்காவின் மாஸிசூசஸ் மாகாணத்தினைச் சேர்ந்த ஊட்ஹோல்ஸ் கடலாராய்ச்சி மையமும் இணைந்து கடலில் முழ்கிய டைட்டானிக் கப்பலை கண்டுபிடித்து ஆராய்ச்சி செய்து வந்தனர்.
வடக்கு அட்லாண்டிக் பகுதியிலிருந்து 400 மைல் தென்கிழக்கே நியூபவுன்ட்லாண்ட் தீவு அருகே ( இந்த கடல்பகுதயில் 98 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய பனிமலைகள் இருந்ததாக கூறப்படுகிறது) கடலுக்கு அடியில் 4 கி.மீ ஆழத்தில் சிதைந்து போயிருந்த கப்பலின் முன்பாகத்தினை கண்டுபிடித்து புகைப்படமும், சில மணிநேரம் ஓடக்கூடிய வீடியோ படமும் எடுத்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது கப்பலின் முன்பாகம் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், கப்பலுக்குள் சென்று ஆராய்ச்சி செய்தால் மேலும் பல வரலாற்று உண்மைகள் தெரியவரும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment