55 மனைவி, 55 குழந்தைகள் ஒரு வினோத மனிதர்.!

| Tuesday, September 14, 2010


பாரீஸ் : ஒரே முகவரி... மாதத்துக்கு ஒரு புது மனைவி, ஆண்டுக்கு ஒரு புது குழந்தை... அரசு சலுகைகளை பெற பிரான்சில் ஆப்ரிக்க மனிதர் செய்த விநோத மோசடியால் அரசுக்கு ஆண்டு இழப்பு ஸி6 கோடி. விழிபிதுங்கி நிற்கின்றனர் அதிகாரிகள். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அந்நாட்டு குடியுரிமை பெற்று வசிக்கிறார் ஆப்ரிக்க மனிதர் ஒருவர். வயது 54. ஒரே முகவரியில் இருந்து கடந்த பல ஆண்டுகளாக புதிய பெயரில் மனைவிகள், அவர்களுக்கு பிறந்ததாக குழந்தைகள் என அரசு அலுவலகங்களில் அந்த கில்லாடி மனிதர் பதிவு செய்து வந்தார்.

மிகவும் லேட்டாக சந்தேகப்பட்ட அதிகாரிகள், சமீபத்தில் அவரது முகவரிக்கு சென்று ரெய்டு நடத்தினர். அதில் வெளிவந்த விஷயங்களை அறிந்து அதிர்ந்தனர். ஆப்ரிக்க ஆசாமிக்கு அரசு புள்ளிவிவரங்களின்படி இதுவரை 55 மனைவிகள், அவர்கள் மூலம் 55 குழந்தைகள். அத்தனை பேருக்கும் ஒரே முகவரி. ஆனால், ரெய்டின்போது அங்கு பெரும்பாலோர் இல்லை. அதிகாரிகள் வலைவீசி தேடியதில் இதுவரை 42 மனைவிகளை அடையாளம் கண்டுபிடித்து விட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஒவ்வொருவரின் ஒரே குழந்தைக்கு அப்பா அவர்தான் என்று தெரிவித்தனர்.

இதுபற்றி போலீஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஆப்ரிக்க மனிதரிடம் நடந்த விசாரணையில், கேளிக்கை விடுதிகள், மதுபான பார்கள், இரவு விடுதிகளிலும், செனேகல், மாலி, கேமரூன் போன்ற ஆப்ரிக்க நாடுகளிலும் கண்டதும் காதல் கொண்ட பெண்களை திருமணம் செய்ததாக கூறினார். 55 பெண்கள் மூலம் 55 குழந்தைகள் உள்ளதாக தெரிவித்தார்’’ என்று கூறப்பட்டுள்ளது.

ஸி14,000 வரை கட்டணம் செலுத்தி பிரான்ஸ் அலுவலகங்களில் 55 மனைவிகளுக்கு தங்கும் உரிமையை பெற்றதன் மூலம், அரசின் சலுகைகளை பெற்று தந்துள்ளார் ஆப்ரிக்க பலே மனிதர். அவரது 55 மனைவிகள், குழந்தைகளுக்கு அரசு சலுகைகளாக ஆண்டுக்கு ஸி6 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதுவே பல ஆண்டுகள் அடிப்படையில் ஸி100 கோடியை நெருங்குகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பிரான்ஸ் போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘‘அரசின் சலுகைகளைப் பெற்று, வேலையின்றி வாழ இந்த வழியை தேர்ந்தெடுத்திருக்கலாம் என தெரிகிறது.

ஆப்ரிக்க மனிதரும், அவரது மனைவிகள் என்று கூறப்படும் 55 பெண்களுக்கும்தான் அந்த 55 குழந்தைகள் பிறந்ததா என கண்டறிய டிஎன்ஏ சோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் முடிவு வந்தபிறகே விசாரணையில் முன்னேற்றம் ஏற்படும்’’ என்றார்.

1 comments:

senthil velayuthan said...

ithu puthusa irukae.nallavum iruku. namaku ankae kudiyurimai kidaikuma.

Post a Comment

Welcome

Blog Archive