புகையிலையால் மாரடைப்பு வர வாய்ப்பு.!!

| Wednesday, September 15, 2010


வாஷிங்டன் : புகையில்லா புகையிலையை பயன்படுத்தினால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நவீன ஆய்வு ஒன்று கூறுகிறது. சிகரெட்டுக்கு மாற்றாக புகையில்லாத புகையிலை பொருட்கள் சில நாடுகளில் கிடைக்கின்றன. பவுடராகவும், கிரீமாகவும் கிடைக்கும் இதை டீன் வயது இளைஞர்கள் அதிக அளவில் பயன்படுத்துவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இதனால் ஏற்படும் பின்விளைவு குறித்து அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக் கழகம் ஒரு ஆய்வை மேற்கொண்டது.

அதன் விவரம்: புகை இல்லாத புகையிலை பொருட்கள் பயன்படுத்துபவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆய்வில், புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படக்கூடிய மாரடைப்பு, புற்று நோய் ஆகிய பாதிப்புகள் இவர்களுக்கும் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. புகை இல்லா புகையிலை பொருட்களால் ஆபத்து குறைவு என்ற தவறான நம்பிக்கை உள்ளது. இது முற்றிலும் தவறு.

எந்த ஒரு புகையிலை பொருளும் உடலுக்கு நல்லதல்ல. எனவே, புகையில்லா புகையிலை பொருட்களினால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் மக்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்ÕÕ என இல்லினாய்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் மரியான் பியானோ தெரிவித்தார்.

55 மனைவி, 55 குழந்தைகள் ஒரு வினோத மனிதர்.!

| Tuesday, September 14, 2010


பாரீஸ் : ஒரே முகவரி... மாதத்துக்கு ஒரு புது மனைவி, ஆண்டுக்கு ஒரு புது குழந்தை... அரசு சலுகைகளை பெற பிரான்சில் ஆப்ரிக்க மனிதர் செய்த விநோத மோசடியால் அரசுக்கு ஆண்டு இழப்பு ஸி6 கோடி. விழிபிதுங்கி நிற்கின்றனர் அதிகாரிகள். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அந்நாட்டு குடியுரிமை பெற்று வசிக்கிறார் ஆப்ரிக்க மனிதர் ஒருவர். வயது 54. ஒரே முகவரியில் இருந்து கடந்த பல ஆண்டுகளாக புதிய பெயரில் மனைவிகள், அவர்களுக்கு பிறந்ததாக குழந்தைகள் என அரசு அலுவலகங்களில் அந்த கில்லாடி மனிதர் பதிவு செய்து வந்தார்.

மிகவும் லேட்டாக சந்தேகப்பட்ட அதிகாரிகள், சமீபத்தில் அவரது முகவரிக்கு சென்று ரெய்டு நடத்தினர். அதில் வெளிவந்த விஷயங்களை அறிந்து அதிர்ந்தனர். ஆப்ரிக்க ஆசாமிக்கு அரசு புள்ளிவிவரங்களின்படி இதுவரை 55 மனைவிகள், அவர்கள் மூலம் 55 குழந்தைகள். அத்தனை பேருக்கும் ஒரே முகவரி. ஆனால், ரெய்டின்போது அங்கு பெரும்பாலோர் இல்லை. அதிகாரிகள் வலைவீசி தேடியதில் இதுவரை 42 மனைவிகளை அடையாளம் கண்டுபிடித்து விட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஒவ்வொருவரின் ஒரே குழந்தைக்கு அப்பா அவர்தான் என்று தெரிவித்தனர்.

இதுபற்றி போலீஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஆப்ரிக்க மனிதரிடம் நடந்த விசாரணையில், கேளிக்கை விடுதிகள், மதுபான பார்கள், இரவு விடுதிகளிலும், செனேகல், மாலி, கேமரூன் போன்ற ஆப்ரிக்க நாடுகளிலும் கண்டதும் காதல் கொண்ட பெண்களை திருமணம் செய்ததாக கூறினார். 55 பெண்கள் மூலம் 55 குழந்தைகள் உள்ளதாக தெரிவித்தார்’’ என்று கூறப்பட்டுள்ளது.

ஸி14,000 வரை கட்டணம் செலுத்தி பிரான்ஸ் அலுவலகங்களில் 55 மனைவிகளுக்கு தங்கும் உரிமையை பெற்றதன் மூலம், அரசின் சலுகைகளை பெற்று தந்துள்ளார் ஆப்ரிக்க பலே மனிதர். அவரது 55 மனைவிகள், குழந்தைகளுக்கு அரசு சலுகைகளாக ஆண்டுக்கு ஸி6 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதுவே பல ஆண்டுகள் அடிப்படையில் ஸி100 கோடியை நெருங்குகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பிரான்ஸ் போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘‘அரசின் சலுகைகளைப் பெற்று, வேலையின்றி வாழ இந்த வழியை தேர்ந்தெடுத்திருக்கலாம் என தெரிகிறது.

ஆப்ரிக்க மனிதரும், அவரது மனைவிகள் என்று கூறப்படும் 55 பெண்களுக்கும்தான் அந்த 55 குழந்தைகள் பிறந்ததா என கண்டறிய டிஎன்ஏ சோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் முடிவு வந்தபிறகே விசாரணையில் முன்னேற்றம் ஏற்படும்’’ என்றார்.

"வீடியோ கேம்' மோகத்தால் பெற்ற குழந்தைகளை பட்டினி போட்ட தாய்

|


லண்டன் : பிரிட்டனைச் சேர்ந்த ஒரு பெண், "வீடியோ கேம்' மீது கொண்ட வெறித் தனமான ஆர்வத்தால், தன் குழந்தைகளை பட்டினியால் பரிதவிக்க விட்டதுடன், செல்லமாக வளர்த்த இரண்டு நாய்களையும் பட்டினியில் போட்டு சாகடித்துள்ளார்.

பிரிட்டனைச் சேர்ந்தவர் கிளாடியா என்ற பெண்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 33 வயதாகிறது. 9, 10 மற்றும் 13 வயதுகளில் மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர், செல்லமாக இரண்டு நாய்களையும் வளர்த்து வந்தார். இவரின் கணவர் இறந்து விட்டார். கடந்த சில மாதங்களாகவே, "வீடியோ கேம்' விளையாடுவதில் ஆர்வம் காட்டினார், கிளாடியா. குறிப்பாக, "ஸ்மாலர் வேர்ல்டு' என அழைக்கப்படும், "வீடியோ கேம்' மீது, இவருக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது. துவக்கத்தில் சில மணி நேரங்களை இதற்காக செலவிட்ட கிளாடியா, அடுத்த சில மாதங்களில், விளையாட்டிலேயே மூழ்கி விட்டார். நேரம் காலம் தெரியாமல், அந்த விளையாட்டிலேயே தொடர்ந்து ஈடுபட்டார். ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் கூட தூங்குவது இல்லை. அந்த அளவுக்கு, "வீடியோகேம்' அவரை அடிமைப்படுத்தி விட்டது. இதனால், இவர் குழந்தைகள் சாப்பிட உணவில்லாமல் அவதிப்பட்டனர்.

குழந்தைகள் பசியால் துடித்தால், கடைகளில் விற்கும் குளிர்பானங்களை வாங்கி கொடுத்து விடுவார். மேலும், "பேக்' செய்யப்பட்ட உணவு வகைகளையும், அவ்வப்போது வாங்கி கொடுப்பார். சூடான உணவை சாப்பிடுவதற்காக அந்த குழந்தைகள் ஏங்கின. தொடர்ந்து ஒரே மாதிரியான ரெடிமேட் உணவுகளையே சாப்பிட்டதால், குழந்தைகளுக்கு சலிப்பு வந்து விட்டது. இதனால், சில நாட்கள் சாப்பிடாமலேயே பசியால் அவதிப்பட்டனர். குழந்தைகள் நிலைமை இப்படி என்றால், அவர் வளர்த்த செல்ல நாய்களின் நிலைமை மிகவும் மோசம். "வீடியோ கேம்' மோகத்தில், நாய்களை கவனிப்பதையே கிளாடியா மறந்து விட்டார். இதனால், நாய்கள் பசியால் துடித்து, இறந்து விட்டன. ஆறு மாதங்களாக, அந்த இரண்டு நாய்களின் உடல்களும் வீட்டுக்குள்ளேயே கிடந்தன. அவற்றை வெளியில் தூக்கிப் போட வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாமல், தொடர்ந்து, "வீடியோ கேம்' விளையாடினார்.

இறந்துபோன நாய்களின் உடல்கள் அழுகி, துர்நாற்றம் அடித்தன. இது குறித்து தகவல் தெரிந்த பக்கத்து வீட்டுக்காரர், போலீசாருக்கு தகவல் கொடுத்தார். கிளாடியா வீட்டுச் சூழலை பார்த்து, போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சாப்பாட்டு அறையிலேயே, இரண்டு நாய்களின் உடல்களும் அழுகிய நிலையில் கிடந்தன. வீணாகிப் போன உணவுப் பொருட்களும், குப்பை கூளங்களும் வீடு முழுவதும் நிறைந்து கிடந்தன. இது குறித்து கிளாடியாவுக்கு எதிராக பிரிட்டன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட், "இனிமேல் கிளாடியா, "வீடியோ கேம்' விளையாடக் கூடாது. செல்லப் பிராணிகளையும் வளர்க்க, அவருக்கு தடை விதிக்கப்படுகிறது. அவருடைய அஜாக்கிரதை காரணமாக இரண்டு நாய்கள் இறந்துள்ளதோடு, அவரின் குழந்தைகளும் பசியால் வாடியுள்ளன. எனவே, 75 மணி நேரம், அவர் வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும். இதற்காக, அவருக்கு பணம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது' என, தீர்ப்பளித்தது.

தொப்பையால் குடல் புற்றுநோய் வரலாம்.!!

| Monday, September 13, 2010


நீங்கள் ஆணாக இருந்தால் இடுப்பு சுற்றளவு 35 அங்குலத்துக்குள் இருக்க வேண்டும். பெண் என்றால் 31 அங்குலம்தான். மீறி வயிறு வளர்த்தால் குடல் புற்றுநோய் ஆபத்து காத்திருப்பதாக லண்டன் ஆராய்ச்சி எச்சரிக்கிறது. உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதி அமைப்பு சார்பில் இங்கிலாந்து மருத்துவ பேராசிரியர்கள் இணைந்து தொப்பைக்கும் குடல் புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு பற்றி ஆராய்ந்தனர். சராசரி அளவைவிட அதிகமாகும் ஒவ்வொரு அங்குல இடுப்பு சுற்றளவும், குடல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 3 சதவீதம் அதிகரிப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.

இடுப்பு சுற்றளவு அதிகரிப்பதற்கேற்ப புற்றுநோய் ஆபத்து அதிகரிப்பதை இந்த ஆராய்ச்சி உறுதிப்படுத்தி உள்ளது. ஆசிய நாடுகளை சேர்ந்த ஆண்களுக்கு இடுப்பு சுற்றளவு அதிகபட்சம் 35 அங்குலம் இருக்கலாம். பெண்களுக்கு 31.5 அங்குலத்தை தாண்டக் கூடாது. இதுவே வெள்ளையர், ஆப்ரிக்க ஆண்களுக்கு 37 அங்குலம் வரை பரவாயில்லை. இந்த அளவுகளைவிட இடுப்பு சுற்றளவு அதிகரித்தால் ஒவ்வொரு அங்குலத்துக்கும் 3 சதவீத புற்றுநோய் வாய்ப்பு அதிகரிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

சராசரி எடையை விட குறைந்து விடாமல் அதேநேரம் சரியான எடையும், இடுப்பு சுற்றளவும் பராமரிக்க வேண்டியது அவசியம். அப்படி செய்தால் இங்கிலாந்தில் மட்டும் குடல் புற்றுநோய் ஏற்படுவதை ஆண்டுக்கு 2,700 பேர் தவிர்க்க முடியும் என்றும் ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது.


மேலதிகமாக சினிமா செய்திகளைப் பார்க்க இங்கே அழுத்தவும்.

அதிகம் சம்பாதித்தாலும் சந்தோஷம் இல்லை: ஆய்வுத் தகவல்.!

|


அதிகமாக சம்பாதித்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக, தங்கள் சொந்த நாடுகளை விட்டு, வளமான நாடுகளுக்கு செல்வோர், உண்மையில் அப்படி சந்தோஷமாக இருக்கின்றனரா என்று ஓர் ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவு எதிர்மறையாகத் தான் அமைந்தது.

நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் உள்ளவர்கள், பிரிட்டன், அமெரிக்கா போன்ற வளமான நாடுகளுக்குச் சென்று தங்கள் திறமைக்கேற்ப அதிகளவில் சம்பாதித்து அதன் மூலம் வாழ்வில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அந்நாடுகளுக்குச் செல்கின்றனர். சொந்த நாடுகளிலிருந்து அயல் நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து செல்வோரின் வாழ்க்கை சந்தோஷகரமானதாக இருக்கிறதா அல்லது அவர்கள் சென்ற நாட்டில் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனரா என்று சமீபத்தில் ஓர் ஆய்வு நடந்தது.

"பொருளாதார புலம் பெயர்வும் மகிழ்ச்சியும்: தாயகத்தினர் மற்றும் குடியேறுவோருக்கு இடையிலான ஓர் ஒப்பீடு' என்ற தலைப்பில் பிரிட்டனைச் சேர்ந்த சமூகவியலாளர் டேவிட் பர்ட்ராம் என்பவர் இந்த ஆய்வை நடத்தினார். மொத்தம் 1,400 பேர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர். ஆய்வின் இறுதியில், குடியேறுவோர் தாங்கள் எதிர்பார்த்த படி மகிழ்ச்சியாக இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

இது குறித்து டேவிட் கூறியதாவது: அதிகளவில் சம்பாத்தியம் செய்வதால் மகிழ்ச்சி கிடைத்து விடும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு தவறானது என்பதை தான் இந்த ஆய்வு நமக்கு காட்டுகிறது. அயல் நாடுகளிலிருந்து வளமான நாடுகளுக்கு குடியேறியவர்களில் பெரும்பாலோர் மனச்சோர்வுடன் தான் உள்ளனர். புலம் பெயர்ந்தோர் அதிகளவில் சம்பாதித்தாலும், தங்கள் உறவுகளை அவர்களால் முழுமையாகப் பேணிக் கொள்ள முடிவதில்லை. அதனால், சொந்த நாட்டுக்காரர்களை விட அந்த நாட்டில் குடியேறியவர்கள் மிகவும் குறைவான அளவிலேயே மகிழ்ச்சி அடைகின்றனர்.

தற்போதைய நிலையை விட அதிகமாகச் சம்பாதித்தால் மகிழ்ச்சியாக வாழலாம் என்று நினைத்துத் தான் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். ஆனால், அங்கு சென்றவுடன் மேலும் அதிகமாகச் சம்பாதித்தால் தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்ற நிலை உருவாவதும் இதற்கு ஒரு காரணம். சம்பாத்தியத்துக்கு ஏற்றாற்போல விருப்பங்களும் அதிகரித்து விடுகின்றன. நம்மில் பெரும்பாலோர், மகிழ்ச்சியை விட பணத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். இந்த ஆய்வும், அது புலம் பெயர்வோர் விஷயத்தில் சரி தான் என்பதை காட்டுகிறது. ஆனால், வளமான ஒரு நாட்டில் வந்தேறியாக வாழ்வது என்பது மிகவும் கடினமானது. இவ்வாறு டேவிட் தெரிவித்தார்.

மேலதிகமாக சினிமா செய்திகளைப் பார்க்க இங்கே அழுத்தவும்.

ஆண், பெண்ணிற்கு அறிவு சமம்: விஞ்ஞானிகள் கருத்து.!

|


ஆண், பெண்ணிற்குஅறிவு வளர்ச்சி சம அளவிலேயே உள்ளன என்றுமருத்துவ விஞ்ஞானிகள்தெரிவித்துள்ளனர்.ஆண் உடலால் பலமானவன் என்பதும், பெண் மனதால் பலமானவள் என்பதும் பொதுவான கருத்து.ஆனால், அறிவு வளர்ச்சியை பொருத்தவரை இருபாலினத்தவருக்கும் சிறு,சிறு வேறுபாடுகள் தவிரசம அளவிலேயே உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.ஆண், பெண் இடையிலான அறிவாற்றல் வேறுபாடு உடற்கூறுகளால் இல்லாமல், வாழ்க்கை அனுபவத்தினால் நிர்ணயிக்கப்படுவதாக விஞ்ஞானிகள்கூறுகின்றனர்.

கற்பிப்பதால் ஏற்படுவதை விட இயற்கையாகவே மனிதர்களுக்கு தனித்திறமை, சிறப்பு இயல்பு,ஆளுமைத் திறன் போன்றவை உருவாகின்றன.ஆனால், அவர்கள் இருக்கும் வாழ்க்கைச் சூழலுக்குஏற்ப, இதன் அளவு மாறுபடுகிறது.ஆணோ, பெண்ணோபிறக்கும் போதேஅனைத்து விதமான தகுதிகளுடன் பிறப்பதில்லை.மாறாக, பெற்றோர் மற்றும்ஆசிரியர்களால் அவர்கள் உருவாக்கப்படுகின்றனர்.இது குறித்து, ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனநல நிபுணர் கார்டிலியா பைன்என்பவர், "டெலுஷன்ஸ் ஆப்ஜெண்டர்' என்ற புத்தகம்எழுதியுள்ளார். அதில் ஆண், பெண் இருவருக்கும் மூளை மற்றும்அதன் நரம்புகள் வளர்ச்சியில் சிறு, சிறு வேறுபாடுகளைத் தவிர, பெரிய வித்தியாசங்கள் இல்லை என்றும், தோற்றத்தில் வேண்டுமானால் மாற்றங்கள் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

அவரது கருத்தைசிகாகோ மருத்துவப்பள்ளியின் பேராசிரியர் லைஸ்எலியட் ஆமோதிக்கிறார்.இது குறித்து எலியட்கூறியதாவது:பிள்ளைகளின் அறிவுவளர்ச்சி என்பது மரபு வழியாய் வருவது அல்ல;மாறாக, கற்பதன் மூலம்வளர்ச்சி பெறுகின்றனர்.சிறுவன், சிறுமி, ஆண்,பெண் இவர்களுக்கிடையேயான அறிவு திறனில்வேறுபாடு இருக்கலாம். அவர்களுக்கு உள்ளதனித்திறன், சிறப்பியல்பு,ஆளுமை திறன் ஆகியவை,அவர்களின் வாழ்க்கைச்சூழல் கொடுக்கும் அனுபவம் மூலமே பெறப்படுகிறது. இதன் மூலம் அவர்களின் அறிவு வளர்ச்சி மேம்படுகிறது.இவ்வாறு எலியட் கூறினார்.

மேலதிகமாக சினிமா செய்திகளைப் பார்க்க இங்கே அழுத்தவும்.

கருகலைப்பு மாத்திரை பெற சிறுமிகளுக்கு அனுமதி: இங்கிலாந்து அரசு.!

|


சமீப காலமாக இங்கிலாந்தில் கலாசாரம் சீரழிந்து வருகிறது. பள்ளிக்கு செல்லும் சிறுமிகள் கூட சீரழிந்து குழந்தை பெற்று வருகின்றனர். இதை தடுக்க அங்கு பள்ளிகளில் “செக்ஸ்” கல்வி புகுத்தப்பட்டுள்ளது.

இருந்தும், அங்கு சிறுமிகள் கர்ப்பம் அடைவதை தடுத்து நிறுத்த முடியவில்லை. எனவே, குழந்தை பெறு வதை தடுப்பதற்காக அந் நாட்டு அரசு ஒரு புதிய நடவடிக்கையை மேற் கொள்ள உள்ளது.

அதாவது தகாத முறையில் “செக்ஸ்” உறவு கொண்டு கர்ப்பமாகும் சிறுமி களுக்கு எந்தவித தடையும் இன்றி கருகலைப்பு மாத்திரை கள் கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. இங்கி லாந்தில் கருகலைப்பு மாத்திரைகள் பெற டாக்டர் கள் எழுதி கொடுத்த மருந்து சீட்டு வேண்டும்.

தற்போது, 13 வயது சிறுமி கூட மருந்து சீட்டு இன்றி மருந்து கடை களில் கருக்கலைப்பு மாத்திரை களை பெற முடியும். அதற் கான சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இத்திட்டம் வருகிற நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. முதலில் குறிப்பிட்ட 10 மருந்து கடைகளில் மட்டும் பரிசோதனை ரீதியில் இது நடைமுறைப் படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்திற்கு தொழிலாளர் கட்சி எம்.பி. ஷிம் தோப்பின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது போன்று தாராளமாக கரு கலைப்பு மாத்திரைகள் வழங்கப்படுவதன் மூலம் தகாத “செக்ஸ்” உறவுக்கு லைசென்ஸ் (உரிமம்) வழங்கியது போலாகிவிடும். கருக்கலைப்பு விவகாரத்தை சிறுமிகள் சாதாரணமாக எடுத்து கொண்டு விடுவார்கள் என கூறியுள்ளார்.

சிறுமி களுக்கு இது போன்ற மாத்திரைகளை மிகசாதாரணமாக வழங்க கூடாது என சமூக நல அமைப்பை சேர்ந்த நார்மன் வெல்ஸ் தெரிவித்துள்ளார்.

எது எப்படி இருந்தாலும் சிறுமிகள் குழந்தை பெறுவதை தடுக்கும் வகையில் அவசரகால நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்படுகிறது என அதிகாரி கெவின் நோபிள் கூறியுள்ளார்.

மேலதிகமாக சினிமா செய்திகளைப் பார்க்க இங்கே அழுத்தவும்.

கண்டபடி எடை குறைக்கிறீர்களா.! மனநிலை பாதிக்குமாம்.!!

| Sunday, September 12, 2010


மெல்போர்ன் : ‘எந்த கடையில நீ அரிசி வாங்கறே’ன்னு கேட்டு ஒரே கிண்டல். எப்படியாவது 20 கிலோ குறைக்கணும் என்று திட்டமா... வேண்டாம், அதிவேகஎடை குறைப்பு, மனநோயில் முடியுமாம். புற்றுநோய் வரவும் வாய்ப்பு அதிகம்என எச்சரிக்கிறது ஆஸ்திரேலிய ஆய்வு. குங்பூக் தேசிய பல்கலைக்கழகத்தின்ஆராய்ச்சியாளர் குழு, உடல் எடை குறைதலுக்கும் நோய்களுக்கும் உள்ளதொடர்பு பற்றி விரிவான ஆய்வு நடத்தியது. அதில் மருந்து தயாரிப்பதில்பயன்படுத்தப்படும் ‘பிஓபி’ என்ற பொருளும், பூச்சி கொல்லிகளும் மனிதஉடலில் தங்கி விடுகின்றன.

பல்வேறு உடல்நலக் குறைவுகள், நோய் எதிர்ப்பு சக்தி அழிவு, மனநோய், புற்றுநோய் ஏற்படுத்துவதில் இந்த பிஓபி முக்கிய பங்கு வகிக்கிறது. எடைகுறைப்பு மருந்துகளை எடுத்துக் கொண்டாலும், வேறு வழிகளில் எடைகுறைத்தாலும் ‘பிஓபி’ அதிகளவில் உடலில் சேர்கிறது. 10 ஆண்டுகளில் உடல்எடை அதிகரித்தவர்களைவிட அதே காலத்தில் வேகமாக எடைகுறைந்தவர்களின் உடல் திசுக்களில் பிஓபி அதிகரித்திருந்தது ஆய்வில் தெரியவந்தது. எனவே, உடல் எடை வேகமாக குறைபவர்களுக்கு மனநோய், புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் மற்றவர்களைவிட அதிகம் என்றுஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இதுபற்றி ஆராய்ச்சி பேராசிரியர் லெஸ்லி கேம்பல் கூறுகையில், ‘‘பிஓபிஅதிகரிப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு திறன் குறையும். அதனால், பல்வேறுநோய்கள் எளிதில் வந்து விடும். அதிகளவில் எடை குறைப்பால் மனநிலையும்பாதிக்கப்படும். புற்றுநோயை உருவாக்கும் கிருமிகள் பெருக வழியேற்படுத்திவிடும்’’ என்றார்.

மேலதிகமாக சினிமா செய்திகளைப் பார்க்க இங்கே அழுத்தவும்.

இதயம் குறித்த அபூர்வ தகவல்கள்.!!

| Saturday, September 11, 2010


பெண்களின் இதயம் ஆண்களின் இதயத்தைவிட அதிகமாக (அதிக தடவை) துடிக்கும். ஒவ்வொருவரின் இதயமும் சுமார் 1 பவுண்ட் (300 கிராம்) எடையுடையதாக இருக்கும். இதயத் துடிப்பு, ரத்தத்தை 30 அடி தூரத்திற்கு செலுத்துமளவிற்கு அழுத்தம் கொடுக்கும். முதன் முதலில் திறந்த இதய அறுவை சிகிச்சை 1893 ஆம் ஆண்டு டாக்டர் டேனியல் ஹால் வில்லியம்ஸ் என்ற மருத்துவ அறிஞரால் செய்யப்பட்டது.

‘நீண்ட மோதிர விரல்’ கொண்ட ஆண்களுக்கு மாரடைப்பு எளிதாக ஏற்படுவதில்லை என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ‘ஆலீவ்’ எண்ணெய், ரத்த கொலஸ்ட்ராலை குறைத்து மாரடைப்பு ஏற்படுவதை தடுத்து நிறுத்து மென ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மத்திய தரைக்கடல் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதில்லை. இதற்கு இவர்கள் சிவப்பு ஒயின், கடல் மீன்கள், ஆலீவ் எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்துவதுதான் காரணமென கண்டறியப்பட்டுள்ளது.

ஒவ்வொருவரின் சராசரி வாழ்விலும் இதயம் சுமார் 1 மில்லியன் பேரல் ரத்தத்தை உடலெங்கும் செலுத்துகிறது. 1967 ஆம் ஆண்டு உலகின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை தென்னாப்பிரிக்காவில் செய்யப்பட்டது. பெரும்பாலானவர்களுக்கு மாரடைப்பு காலை 8 முதல் 9 மணி நேரத்தில் ஏற்படுகிறது. காதலுக்கும் இதயத்திற்கும் நேரடியாக தொடர்பு கிடையாது. அது மூளை ஞாபகம் நினைவு மனம் தொடர்புடையது. பெரும்பாலான மாரடைப்பு திங்கட்கிழமைதான் ஏற்படுகிறது.

சராசரியாக ஒரு நுண்ணிய ரத்தநாளத்தின் நீளம் 1 மி.மீ. அளவாகும். நமது உடலிலுள்ள அனைத்து நுண்ணிய ரத்தநாளங்களின் மொத்த அளவு ஒரு கால்பந்தாட்ட மைதானத்தை விட பெரியதாகும். ஆண்களைவிட பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இதயத் துடிப்பு அதிகமாக இருக்கும். உலக முழுவதும் இதய நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 1.5 கோடியாகும். வளர்ந்த நாடுகளில் இறப்பிற்கு 50% இதயக் கோளாறுகளே காரணமாக இருக்கின்றன. வளரும் நாடுகளில் இது 15 சதவீதமாக உள்ளது.


ஆன்டிபயாடிக்கை பயன்படுத்திய வடக்கு ஆப்பிரிக்கர்கள்.!!

|


கிட்டத்தட்ட 1500 ஆண்டுகளுக்கு முன்பே வடக்கு ஆப்பிரிக்கர்கள் ஆன்டிபயாட்டிக்கை பயன்படுத்தியுள்ளதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.

பீருடன் சேர்த்து டெட்ராசைக்ளின், ஸ்டிரெப்டோமைசிஸ் போன்ற பாக்டீரியாக்களை வடக்கு ஆப்பிரிக்கர்கள் பயன்படுத்தியுள்ளனராம்.

சூடான், எகிப்து எல்லைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புகளை வேதியியல் ஆய்வுக்கு உட்படுத்தியபோது இது தெரிய வந்துள்ளது. ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்ட எலும்புகள் கிடைத்த இடம் ஒரு காலத்தில் நூபியா என அழைக்கப்பட்டது. அப்பகுதியில் டெட்ரா சைக்ளினை உற்பத்தி செய்யும் பாக்டீரியா மண்ணில் இருப்பது தெரிய வந்துள்ளது.

இப்பகுதியில் பீர் உற்பத்தி மிகவும் பிரபலமானது. குறிப்பாக பழங்காலத்து எகிப்தில் பீர் உற்பத்தி அக்காலத்தில் வெகு பிரபலமாக இருந்துள்ளது. அக்காலத்தில் நூபிய மக்கள் ஸ்டிரெப்டோமைசிஸ் அல்லது அது தொடர்பான பாக்டீரியாக்களை பீர் தயாரிக்க பயன்படுத்தியுள்ளனர். இதன் மூலம் அடர்த்தியான பீரை அவர்கள் தயாரித்துள்ளனர். இந்தப் பீரை 2 வயது முதலானவர்கள்
அருந்தியுள்ளனராம்.

அவர்கள் பயன்படுத்தி வந்த பாக்டீரியா ஒரு ஆன்டி பயாடிக் என்பது தெரியாமலேயே அதை அவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர் என்கிறது அந்த ஆய்வு.

தொடர்ந்து 11,000 கி.மீ., பறக்கும் அபூர்வ பறவை.!!

|


உண்ணாமல், உறங்காமல், ஓய்வெடுக்காமல் தொடர்ந்து 11 ஆயிரம் கி.மீ., பறக்கும், “காட்விட்’ என்ற பறவை, உயிரியல் வல்லுனர்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அலாஸ்காவின் தெற்கு கடற்கரை பகுதியில், கடந்த 1976ம் ஆண்டு ராபர்ட் இ கில் என்ற உயிரியல் வல்லுனர், பறவைகள் இடம் பெயரும் விதம் குறித்து ஆய்வு மேற்கொண்டிருந்தார்.

அப்போது, “காட்விட்’ என்ற பறவையினத்தை அவர் கூர்ந்து கவனித்தபோது, அதன் நடவடிக்கைகள் பெரும் வியப்பில் ஆழ்த்தின. நீண்ட பயணத்தின் மூலம் இடம் பெயர்ந்த அப்பறவை, பயணக் களைப்பினால் உற்சாகம் இழக்காமலும், பருத்தும் காணப் பட்டது. எனவே, ராபர்ட் அந்த பறவையின் இடம்பெயரும் தன்மை குறித்து தொடர்ந்து ஆராயத் துவங்கினார்.

இந்தப் பறவைகள் குளிர்காலத் தில், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு வருகின்றன. இப்பகுதிகளுக்கு வர, கடல் மற்றும் நிலத்தைத் தாண்டி நீண்ட பயணம் மேற்கொள்கின்றன. இந்த பயணக் காலத்தில் அவை, உணவு உட்கொள்வதில்லை; ஓய்வு எடுப்பதில்லை. ஆனால், உடல் எடை மட்டும் அதிகரிக்கிறது.

பறவை ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன், ராபர்ட், “காட்விட்ச்’ பறவையின் உடலில், “சேட்டிலைட் டிரான்ஸ் மிட்டர்’களை அமைத்தார். அந்த, “டிரான்ஸ் மிட்டர்’ ராபர்ட் டின் கம்ப்யூட்டருக்கு, பறவை பறக்கும் திசையிலிருந்து சிக்னல்களைக் கொடுத்தபடி இருந் தது. அந்த பறவை பறக்கத் துவங்கியது.

அப்பறவை, ஒன்பது நாட் களில் 11 ஆயிரம் கி.மீ., பறந்தது. “இந்த பறவைகளின் நீண்ட தூர பயணம் மிகப்பெரிய சாதனை, இதை விவரிக்க வார்த் தைகளே இல்லை’ என, ராபர்ட் தெரிவித்துள்ளார்.

மிடுக்கு நடை, கைகுலுக்குதல் நீண்ட ஆயுளுக்கு அறிகுறி.!!

| Friday, September 10, 2010


லண்டன்: யாரைப் பார்த்தாலும் உடனே கம்பீரமாக கைகுலுக்கும் பழக்கமும், மிடுக்கான நடை பழக்கமும் உள்ளவரா நீங்கள்? அப்படியானால் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம். ஆம், இதுபோன்ற பழக்கவழக்கங்கள், நீண்ட ஆயுளுக்கு அறிகுறி என்கிறார்கள் நிபுணர்கள்.

இங்கிலாந்தில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலை சேர்ந்த நிபுணர்கள், மனிதர்களின் கம்பீர நடை உடை பாவனைகளால் ஏற்படும் பயன் குறித்து ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டனர். 33 நாடுகளைச் சேர்ந்த 18 முதல் 80க்கும் மேற்பட்ட வயது உடைய 50 ஆயிரம் பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். 10 ஆண்டுகளாக நடைபெற்ற அந்த ஆய்வின் விவரம்: இருக்கையிலிருந்து வேகமாக எழுதல், கம்பீரமாக நடப்பது, மற்றவர்களை பார்க்கும்போது கைகுலுக்குவது உள்ளிட்ட பழக்கம் உள்ளவர்கள் அதிக தன்னம்பிக்கையுடன் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும், நீண்ட ஆயுளுடன் இருப்பவர்களுக்கும் இதுபோன்ற மிடுக்கான பழக்க வழக்கங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதை எட்டினாலும், அதே துடிப்புடன் இருப்பதை ஆய்வின் மூலம் உணர முடிந்தது. எத்தகைய உடற்கூறு ஆய்வும் இன்றி, சாதாரண மதிப்பீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு மருத்துவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரிதும் உதவும்.

இதற்காக எவ்வித கூடுதல் முயற்சியும் எடுக்கத் தேவையில்லை. இத்தகைய சாதாரண பழக்கவழக்கங்களை கடைபிடித்தாலே நோயின்றி நீண்ட காலம் வாழலாம்ÕÕ என இங்கிலாந்து மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிபுணர் கூப்பர் தெரிவித்தார்.

எச்.ஐ.வி.யை குணப்படுத்தும் புதிய மாத்திரை : நமீபியா கண்டுபிடிப்பு.!!

|


வின்டியோக்: நமிபீயாவைச் சேர்ந்த மெர்டக் ஷார்ப் அன்ட் டூஹோம் எனும் மருந்து தயாரிப்பு நிறுவனம் எய்ட்‌ஸை குணப்படுத்தும் அட்ரிப்லா, ஐசென்ட்ரசஸ் எனும் புதிய மாத்திரையினை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. நமீபியாவின் நம்பா நகரில் உலக அளவில் மருந்து தயாரிப்பு பொருட்களை சப்ளை செய்யும் மெர்டக் ஷார்ப் அன்ட் டூஹோம் நிறுவனம் எச்.ஐ.வி. பாதிப்பட்டவர்களின் தொடக்க நிலையில் உள்ள எச்.ஐ.வி.-1 எனும் கிருமியினை குணப்படுத்தக்கூடிய மாத்திரையினை கண்டுபிடித்துள்ளது.

இது குறித்த அறிக்கையினை நமீபிய அரசின் சுகாரதாரத்துறையினரிடம் அளித்து ஒப்புதல் பெறவுள்ளதாக கூறியுள்ளது. விரைவில் மருந்து கடைகளில் விற்பனைக்கு வரவுள்ளதாகவும் தகவலகள் தெரிவிக்கின்றன. 

200 ஆண்டுகளுக்கு பிறகு பூத்த அரிய வகை மலர்.!!

|


லண்டனில் இருந்து வெளிவரும் டெலிகிராப் எனும் பத்திரிகையில் இது குறித்து கூறப்பட்டுள்ளதாவது: இங்கிலாந்தின் கடந்த 1765-ம் ஆண்டு முதன்முதலாக பிராங்கின் அலோடாமஹா எனும் தாவரவியில் இனத்தினைச் சேர்ந்த பிராங்க்ளின் எனும் மலர் பயிரிடப்பட்டது. இது மிகுந்த நறுமணம் கொண்டது.

டீ கப் போன்று வடிவில் அழகான வெள்ளை நிற இதழ்களை கொண்டது. இதனை லண்டனில் பிலடெல்பியா தாவரவியல் வல்லுனர் ஜான், வில்லியம் ஆகியோர் முதன்முதலாக தங்களது தோட்டத்தில் பிராங்க்ளின் மரத்தில் வளர்ந்தனர். அவர்கள் தங்களது நெருங்கிய நண்பரான பெஞ்சமின் பிராங்க்ளின் நினைவாக அவரது பெயரையே இம்மலருக்கு சூட்டினர்.

இந்நிலையில் நறுமணமிக்க இந்த மலர் பல்வேறு சுற்றுசூழல், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் மறைந்து போனது. எனினும் குரோன்வால் மாகாணத்தின் டூருரோ கிõமத்தைச் சேரந்த விவசாயி தனது தோட்டத்தில் பயிரிட்டு இம்மலரினை வெற்றிகரமா மீண்டும் மலர செய்தார். குளிந்த வெப்பநிலை உள்ள இடங்களில் ஏறத்தாழ 4 முதல் 7 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. அதிக நறுமணம் கொண்டது.

நிதிபற்றாக்குறையால் சேவையை நிறுத்துகிறதுபி.பி.சி..!

|


உலக முழுவதும் மிகப்பெரிய ஒளிபரப்பும் சேவையினை கொண்டுள்ள மீடியா நிறுவனமான பி.பி.சி. தனது நிதிபற்றாக்குறையினால் ஆட்குறைப்பு செய்வதுடன் சில முக்கிய நாடுகளில் ஒளிபரப்பு சேவையினை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது. பி.பி.சி. ஒளிரப்பு நிறுவனம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் 25 சதவீவதம் ஆட்குறைப்பு செய்யவுள்ளதாக கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. .

நிதிபற்றாகுறையினால் தள்ளாடி வந்த நிலையிலும் இந்நிறுவனம் வெளிநாடு களில் தனது ஒளிபரப்பு அலுவலகங்களை நிறுவியுள்ளது. போதிய விளம்பர வருமான இல்லாத சில நாடுகளில் இதன் ஓளி பரப்பினை நிறுத்தி வைக்கவுள்ளது. அதன்படி பர்மா, ரஷ்யா ஆகிய நாடுகளில் தனது ஒளிபரப்பினை நிறுத்தவுள்ளது. மேலும் பிற நாடுகளில் உள்ள அலுவலக நிர்வாகிகளை 272 மில்லியன் டாலர் அளவுக்கு நிதி திரட்டுமாறும் அறிவித்தியுள்ளது.

உண்மையான மகிழ்ச்சிக்கு 35 லட்சம் வருமானம் தேவை.!!

| Thursday, September 9, 2010


வெறும் பணத்தால் மகிழ்ச்சியை வாங்கி விட முடியாது’ என்று சொல்பவரா நீங்க? கொஞ்சம் தள்ளி நிற்கவும். ஆண்டுக்கு ஸி35 லட்சம் சம்பாதிப்பவர்கள்தான் உண்மையான மகிழ்ச்சியுடன் இருப்பதாக அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது. பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் மனவியல் துறை பேராசிரியர்கள் குழு, வருமானத்துக்கும் மன மகிழ்ச்சிக்கும் உள்ள தொடர்பு பற்றி ஆராய்ந்தது.

அதன்படி, வாழ்க்கையே தினமும் ஒரு போராட்டமாக இருப்பதாக குறைந்த வருமானம் பெறுவோர் தெரிவித்தனர். வருமானம் அதிகரித்தால் அதற்கேற்ப மகிழ்ச்சியும் அதிகரிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். ஆண்டுக்கு ஏறக்குறைய ஸி35 லட்சம் வருமானம் பெறுவோர்தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக ஆய்வில் தெரிய வந்தது. இது அமெரிக்காவுக்குதான் என்ற போதிலும் அந்தந்த நாட்டின் கரன்சி மதிப்புக்கு ஏற்ப இதே தொகையை வருமானமாக பெறுவோருக்கும் பொருந்தும் என்று ஆய்வுக் குழு தெரிவித்தது.

அதேநேரம், ஆண்டுக்கு ஸி70 லட்சம் முதல் ஸி95 லட்சம் வரை வருமானம் பெறுவோரின் மகிழ்ச்சி குறைவதாகவும், ஸி95 லட்சத்துக்கு மேல் சம்பாதிப்பவர்கள் சொந்த வாழ்க்கையை கவனிக்க முடியாமல் நிம்மதி இழப்பதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

தோல் குறித்த அபூர்வ செய்திகள்.!!

|


தாடி முடிதான் வேகமாக வளரக்கூடிய முடியாகும். இந்த முடியை ‘சேவிங்’ செய்யாமல் விட்டால் இவை 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும். மனிதத் தோலின் ஒவ்வோர் அங்குலத்திலும் 20 அடி நீள அளவிற்கு ரத்தக் குழாய்கள் இருக்கும்.கை நகங்கள் கால் நகங்களை விட வேகமாக வளரும்.மனிதன் தினமும் 6,00,000 நுண் தோல் பொருட்களை இழக்கிறான். இது ஒரு மணி நேரத்தில் நடைபெறுவதாகும். 1 வருடத்தில் சுமார் 1.5 பவுண்ட் எடையை இவ்வாறு இழக்கும் இவர் தனது வாழ்நாளில் சுமார் 105 பவுண்ட் எடைகளை இழந்து விடுவான்.

தினந்தோறும் குளிக்கும்போதும், தலை சீவும்போதும் மனிதன் சராசரியாக 40 முடிகளை இழக்கிறான்.மனித தோலிலுள்ள நரம்புகளை ஒன்றாக சேர்த்தால் அவை சுமார் 45 மைல் தூரம் உள்ளதாக இருக்கும் (அதாவது 72 கி.மீ. தூரம் கொண்டதாக இருக்கும்.)நமது உடலிலுள்ள தோல் மொத்தம் 2 மீட்டர் அளவு கொண்டது. (20 சதுர அடி.)நமது தோலில் 2 மில்லியன் முதல் 3 மில்லியன் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. இவை கோடைக்காலத்தில் ஒரே நாளில் சுமார் 13 லிட்டர் வியர்வையை வெளிப்படுத்துகின்றன.நமது தோலில் வாழும் நுண்கிருமிகளை எண்ணினால், பூமியிலுள்ள மனிதர்களின் எண்ணிக்கைக்கு அது சமமாக இருக்கும்.

பிறந்த குழந்தையின் அக்குள் பகுதியில் 10 நாட்களுக்குள் 5,00,000 நுண்கிருமிகள் சேர்ந்துவிடும்.புதிய தோல் செல்கள் வினாடிதோறும் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும்.தோல் செல்களின் ஆயுள் 2 வாரங்கள்தான்!முடியின் கருப்பு நிறத்திற்கு காரணம் ‘மெலனின்’ என்ற நிறமியாகும்.இதனை தோலிலுள்ள நிறமி செல்கள் உற்பத்தி செய்கின்றன. வயதாக, வயதாக இந்த நிறமி செல்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும். இதன் காரணமாகவே வயதாகும்போது முடி நரைக்கிறது.கண்ணிமை முடிகள் முழுவதும் உதிர்ந்து விடுவது அபூர்வமாகும். இதற்கு ‘மேடரோஸிஸ்’ என்று பெயர்.

மனிதனுடைய தோல் ஒரு மாதத்திற்கு ஒருமுறை முற்றிலுமாக தோன்றுகிறது. (பழைய தோல் செல்களை இழந்து புதிய செல்கள் உருவாகுவதால்.)மனித தோல் செல்கள் பல்வேறு நுண்கிருமிகளுக்கு எதிராக செயல்படும் பொருளை உற்பத்தி செய்கின்றன.காலில் மட்டும் 2,50,000 வேர்வை சுரப்பிகள் உள்ளன.நமது உடலிலேயே மிகப் பெரிய உறுப்பு தோல்தான்!

தேடுதல் தொழில்நுட்பத்தினை மேலும் விரைவுபடுத்தியது கூகுள்.!!

|


முன்னணி இணையதளமான கூகுள் தனது தொழில்நுட்பத்தினை மேம்படுத்த தனது தேடுதல் தொழில்நுட்பத்தினை மேலும் விரைவுபடுத்தவுள்ளது. உலகில் நெம்பர்-1 தேடுதல் இணையதளமாக கூகுள் உள்ளது.மைக்ரோ சாப்ட் நிறுவனத்துடன் இணைந்து இத்தகைய தொழில்நுட்பத்தினை தொடங்கியுள்ளது. எனினும் தற்போதுள்ள போட்டியினாலும், சமூக நெட்வொர்க்குகளான பேஸ்புக், ஐபோன் ஆகியன இணைதளங்கள் பயன்படுத்துவோரை வெகுவாக கவர்ந்துள்ளன. இதனை சமாளிக்க கூகுள் தயாராகி வருகிறது.

கூகுள் தேடுத் இணையதளம் மற்றும் பயன்படுத்துவது குறித்து கூகுளின் துணை தலைவர் மரிஸாமையோர் கூறுகையில், கூகுள் தேடுதல் இணையதளம் வாயிலாக எந்த ஒரு செய்திகள், அது தொடர்பான விபரங்களை 2 முதல் 5 நொடிகளில் அதற்குரிய தேடுதல் பாக்ஸில் டைப் செய்து எளிதில் பெறலாம். உதாரணமாக காலநிலை மாற்ற விபரங்களை அறியவேண்டுமெனில் டபிள்யூ என டைப் செய்து அன்றைய காலநிலை மற்றும் வானிலை மாற்றம் குறித்த விபரங்களை பெறலாம். அதற்கான வெப்பேஜ்களில் இவைபொருத்தப்பட்டிருக்கும் ஆன்லைன் வாயிலாகவும் எளிதாக பயன்படுத்தலாம் என்றார்.

மூளை நினைப்பதை எழுதும் கருவி கண்டுபிடிப்பு..!

|


மூளை என்ன நினைக்கிறதோ அதை அப்படியே எழுத்தாக கொண்டு வரும் கருவியை லண்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். லண்டனில் உள்ள பேச்சு ஆய்வு மைய விஞ்ஞானிகள் இந்த கருவியை உருவாக்கி உள்ளனர்.

பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பேசுவதை மற்றவர்கள் புரிந்து கொள்ள முடியாது. அதே நேரத்தில் அவர்கள் எழுதி காட்டுவதற்கு கையும் செயல்படாது. இப்படிப்பட்டவர்கள் பேச்சை எப்படி புரிந்து கொள்வது என்பது பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரின் மூளையில் எலக்ட்ராட்ஸ் கொண்ட மைக்ரோ சிப்பை பொருத்தி அதை கம்ப்யூட்டரில் இணைத்தனர். மூளை வெளியிடும் சிக்னலை அந்த கம்ப்யூட்டர் எழுத்தாக மாற்ற நினைத்தனர்.

அது 70ல் இருந்து 90 சத வீதம் துல்லியமாக எழுத்தாக மாற்றியது ஆமாம், சூடாக இருக்கிறது, குளிராக இருக்கிறது, பசிக்கிறது, தாகம் எடுக்கிறது, ஹலோ, குட்டை, அதிகம், குறைவு போன்ற வார்த்தைகளை துல்லியமாக மாற்றியது.

இதன் மூலம் மூளை நினைப்பதை அனைத்தையும் எழுத்தாக மாற்றி விட முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இதற்காக நவீன கருவியை உருவாக்கும் முயற்சியில் அவர்கள் இறங் கியுள்ளனர்.

டீன்ஏஜ் மனஅழுத்தத்தை இன்டர்நெட் குறைக்கும்.!!

|


சிட்னி : நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்டர்நெட் பயன்படுத்துவதால் சாதகமான மருத்துவ பயன் ஏற்படுவதாக கூறும் ஆராய்ச்சி வெளிவந்துள்ளது. டீன்ஏஜ் மனஅழுத்த நோயாளிகள், இன்டர்நெட் பார்ப்பதால் குணமாகலாம் என்று ஆஸ்திரேலியாவை சேர்ந்த இந்திய ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். ‘இன்டர்நெட் செல்ப் ஹெல்ப் பார் டெப்ரஷன்’ என்ற தலைப்பில் சிட்னி பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்திய பேராசிரியர் சுவனா சேத்தி ஆய்வு நடத்தினார். மனஅழுத்தம் கொண்ட டீன்ஏஜ் வயதினரை தேர்வு செய்து, இன்டர்நெட்டில் மனநலம் குறித்த தகவல் பரிமாற்ற இணைய தளங்களை பார்த்து வர செய்தார்.

இணைய தளங்களில் மனஅழுத்தத்துக்கு மருத்துவ நிபுணர்களின் கலந்துரையாடல், சிகிச்சை ஆலோசனைகள் பெற்ற டீன்ஏஜ் வயதினர், பாரம்பரிய சிகிச்சை பெற்றவர்களைவிட வேகமாக குணமானது தெரிய வந்தது. டாக்டரிடம் நேரில் மனஅழுத்த பாதிப்புகளை விளக்குவதைவிட ஆன்லைன் ஆலோசனை தளங்களில் பதிவு செய்வது துல்லியமாக இருப்பதால், நிபுணர்கள் அளிக்கும் ஆலோசனைகளால் மனஅழுத்தம் வேகமாக குறைகிறது. டாக்டர்களில் நேரில் ஆலோசனை பெறச் செல்லும் இளைஞர்கள் பல விஷயங்களை தெரிவிக்க மறந்து விடுகின்றனர். இதனால், சிகிச்சை சரியாக அமையாமல் பிரச்னை நீடிக்கிறது என்கிறார் டாக்டர் சுவனா சேத்தி.

சூரிய ஒளி முகசுருக்கத்தை ஏற்படுத்தும்..!

| Wednesday, September 8, 2010


சூரிய ஒளியில் வைட்டமின் டி உள்ளது. இது மனிதர்களின் உடல் நலத்திற்கு நன்மை பயக்கும், என்ற கருத்து நிலவுகிறது. எனவே, மேற்கத்திய நாட்டவர்கள் கடற்கரையில் படுத்த படி சூரிய குளியல் (சன்பாத்) செய்கின்றனர்.

ஆனால் சூரிய ஒளி முகத்தில் சுருக்கத்தை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். லாண்காஸ்டர் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் டிரேவர் மேக்மிலன், சாரா அல்லிசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அதன் மூலம், கண்ணாடி வழியாக ஊடுருவி வரும் சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருந்தால் முகத்தின் வசீகரம் கெட்டு விடும். ஏனெனில் ஊடுருவி வரும் சூரிய ஒளியின் கதிர்கள் முகத்தில் சுருக்கத்தை ஏற்படுத்தி விடும்.

இதனால் 7 ஆண்டுகள் அதிகமாக முதுமையான தோற்றம் ஏற்படும். அதே போன்று காரில் தொடர்ந்து பல மணி நேரம் பயணம் செய்யும் போதும் இது போன்ற நிலை உண்டாகும். குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் பயணம் செய்தால் கடுமையாக தாக்கும் சூரிய ஒளியால் முக சுருக்கம் ஏற்படும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

தேனீக்கள் குறைவதால் உணவு உற்பத்தி பாதிப்பு..!

|


லண்டன் : தேனீக்கள் குறைந்து வருவதால் செடிகளில் மகரந்த சேர்க்கையும் குறைந்து உலக அளவில் இது உணவு தானியங்கள் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கனடாவை சேர்ந்த விஞ்ஞானி வருத்தம் தெரிவித்துள்ளார். கனடாவில் டோரண்டோ பல்கலை. ஆராய்ச்சியாளர் ஜேம்ஸ் தாமஸ். இவர் கொலராடோவின் பாறைகள் நிறைந்த மலைப்பகுதியில் கடந்த 17 ஆண்டுகளாக தேனீக்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார்.

இவரது ஆராய்ச்சியில், ‘பிரிட்டனில் தேனீக்கள் பெரிய அளவில் குறைந்து, செடிகளில் மகரந்தசேர்க்கை 50 சதவீதம் குறைந்துள்ளது. இது பெரிய அளவில் உணவு தானியங்கள் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும். பிரிட்டனில் இந்த பாதிப்பு அதிகளவில் உள்ளது. மற்ற நாடுகளுக்கும் இது ஒரு எச்சரிக்கை. பிரிட்டனில் தான் அதிகளவில் தேனீக்கள் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. பட்டாம்பூச்சி மற்றும் சில பூச்சிகள் இருப்பிட பற்றாக்குறை, சீதோஷண மாற்றம் போன்ற காரணங்களால் குறைந்து வருகின்றன’ என்று தெரிவித்துள்ளார்.

அதிகாலை நிகழ்த்தும் அற்புதங்கள்.!!

| Tuesday, September 7, 2010


அதிகாலை நிகழ்த்தும் அற்புதங்கள் பல. உதித்து உயர்ந்தெழும் சூரியன், மலர்களை மட்டுமா மலரச் செய்கிறது… வாழ்க்கையில் உயர விரும்பும் பலரையும் மலரச் செய்யும் பொழுதல்லவா அது!

நீங்கள் நேற்றுவரை நித்திரையில் ஆழ்ந்திருந்தால் இனியாவது அதிகாலையின் அதிசயங்களை அனுபவிக்க விடி காலையிலேயே விழித்தெழுங்கள்.ஆமாம்…காலையில் துயில் எழும் பழக்கம் நமக்கு பல்வேறு நன்மைகளைத் தருகின்றன. `அதிகாலையில் எழுவது ஆரோக்கியமும், அறிவும் தரும்’ என்கிறார் பிராங்கிளின்.

சீக்கிரம் எழுந்தால் அதிகாலையை போன்ற அமைதி உங்களிடமும் ஒட்டிக் கொள்ளும். வாகன இயக்கம், ரேடியோ, டி.வி. இரைச்சல், பக்கத்து வீடுகளின் கூச்சல், குழந்தைகளின் அழுகுரல் என்று எதுவும் உங்களுக்குத் தொந்தரவு செய்யாது.

எங்கும் அமைதி நிலவ நீங்கள் நிம்மதியாக செயல்படலாம். அதிகாலையை போன்ற அருமையான பொழுதை வேறு எப்போதும் அனுபவிக்கவே முடியாது. அந்த வேளைதான் சிந்திக்க, செயல்பட, படிக்க, சுவாசிக்க என பலவற்றுக்கும் ஏற்றது.

காலையில் படுக்கையில் இருந்து துள்ளிக்குதித்து எழுந்திருங்கள். சோம்பேறித்தனமாக எழுந்தால் அன்றைய தினமே சோம்பலாகத்தான் இருக்கும். அவசரம் அவசரமாக வேலைகளை செய்ய வேண்டிவரும். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில் சிரமம் ஏற்படும். பிறகு அலுவலகத்திற்கு கிளம்ப தாமதம் ஆகும். இப்படி அடுக்கடுக்கான சிரமங்கள் தொடர, நிம்மதியே போய்விடும்.

சீக்கிரமாக எழுந்துவிட்டால் பாதி வேலையை சூரியன் உதிக்கும் முன்பே முடித்துவிட்டு நிதானமாக இருக்கலாம். இதனால் மகிழ்ச்சியாக ஆரம்பிக்கும் நாள் இறுதிவரை இன்பமாகவே தொடரும்.

காலையில் சீக்கிரம் எழுந்திருந்தால் காலை உணவை நிதானமாக சமைத்து ருசித்து சாப்பிடலாம். காலை உணவு, நலமான வாழ்வுக்கு தினமும் சாப்பிடும் உற்சாக டானிக் போன்றது. சுறுசுறுப்புக்கும் உதவும். சோம்பேறித்தனமாக படுத்திருந்து காலை உணவை சாப்பிடும் நேரத்திற்கு எழுந்திருந்தால், பணிக்குச் செல்லும் அவசரத்தில் உணவை தவிர்க்கும் சூழல் கூட வரும். இதனால் எரிச்சலும், சோம்பலும் ஒட்டிக் கொள்ளும்.
காலையில் எழுந்து `ஹாயாக’ அமர்ந்து டீ குடித்துக் கொண்டே பேப்பர் படித்துவிட்டு பரபரப்பில்லாமல் காலை உணவைச் சாப்பிட்டால் கிடைக்கும் சுகமே சுகம்.

தேகபயிற்சி செய்ய உகந்ததும் காலை பொழுதுதான். மற்ற நேரங்களைவிட அதிகாலை வேளை தான் உடற்பயிற்சிக்கு ஏற்ற வேளை. நலமாக வாழ்வதற்காக நாம் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று உடற்பயிற்சி. அதனால் கிடைக்கும் பலன்களும் பலபல. காலையில் உடற்பயிற்சி செய்வதை எந்தக் காரணத்திற்காகவும் நிறுத்தாதீர்கள்.

காலை வேளையிலேயே எழுதுவது, மெயில் பார்பது போன்ற சின்னச் சின்ன வேலைகளை செய்து முடித்தால் நேரத்தை மிச்சம் பிடிக்கலாம். அந்த நேரத்தை குடும்பத்தினருடன் ஜாலியாகக் கழிக்கலாம்.

உங்கள் லட்சியத் திட்டங்கள் பற்றி அதிகாலையில் சிந்தியுங்கள். அப்போது குழப்பங்களுக்குக் கூட தெளிவான வழி கிடைக்கும். எழுந்தவுடன் அன்று முடிக்க வேண்டிய வேலைகளை பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். உடனே லட்சிய பயணத்தை தொடங்குங்கள். வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

ஒவ்வொரு வேலையையும் சரியாகச் செய்து முடிக்க வேண்டுமானால் அதற்கு காலையில் எழுவது தான் சரியான செயல். ஒரு வேலையில் தாமதமானாலும் அடுத்தடுத்த தாமதங்கள் உங்கள் மதிப்பை குறைப்பதோடு, வேலைகளையும் முடக்கும்.

நீங்கள் சொல்வதெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. காலையில் எழுந்திருக்கத்தான் முடியவில்லை என்கிறீர்களா? அது ஒன்றும் பெரிய காரியமில்லை. முதலில் சில நாட்கள் அலாரம் வைத்து எழுந்திருக்கலாம். அலாரத்தை படுக்கையில் வைத்தால் மனம் அணைத்துவிட்டு தூங்கத்தான் சொல்லும். எனவே எழுந்து சென்று `ஆப்’ செய்யும் தொலைவில் அலாரத்தை வையுங்கள்.

இரவில் 2 டம்ளர் தண்ணீர் பருகிவிட்டு படுத்தால் காலையில் தானாகவே எழுந்திருப்பீர்கள். எழுந்தவுடன் மீண்டும் படுக்காமல் வேலை செய்யத் தொடங்கிவிட்டால் சோம்பல் ஓடியே போகும்.

குப்பையை `விழுங்கி’ச் செல்லும் ரோபோ.!!

|


இன்று பல நகரங்களில் குப்பை வண்டிகள் வீடு தேடி வந்து குப்பையைச் சேகரித்துச் செல்கின்றன. அது மாதிரி வீட்டுக்கு வந்து குப்பையை `விழுங்கி’ச் செல்லும் ரோபோவை ஐரோப்பிய விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கின்றனர்.

ஆள் உயரத்துக்கு இருக்கும் இந்த `ரோபோ’ நீங்கள் தொலைபேசியில் அழைக்கும் நேரத்துக்கு வந்து உங்கள் வீட்டு வாயிலில் காத்திருந்து குப்பையைப் பெற்றுக்கொள்ளும். `டஸ்ட்கார்ட்’ என்ற இந்த `ரோபோ’ குப்பைத் தொட்டியை உருவாக்கியவர்களில் ஒருவரான பேராசிரியர் பாலோ டாரியோ கூறுகையில், “இது அடிப்படையில் ஒரு நகரும் குப்பைத் தொட்டிதான்.

ஆனால் இது அபாரமான உணர்திறனும், கட்டுப்பாட்டு அமைப்புகளும் கொண்டது” என்கிறார். அவர் மேலும் தொடர்ந்து கூறுகையில், “நாங்கள் மிகச் சிறந்த, மிகவும் நவீனமான ரோபோட்டிக்ஸ் பாகங்களைக் கொண்டு இந்த `ரோபோ’ குப்பைத் தொட்டியை உருவாக்கியிருக்கிறோம். ஐரோப்பா முழுவதும் உள்ள, குப்பையை அகற்றும் நிர்வாகத்தினருக்கு இது பெரிய பிரச்சினையைத் தீர்த்து வைத்திருக்கிறது என்று கூறலாம்.

இதில் உள்ள இழுப்பறையில் நீங்கள் உங்களின் குப்பைகளை அல்லது மறுசுழற்சிக்கான பொருட்களை இட்டுவிடலாம். ஆனால் இந்த `டஸ்ட்கார்ட்’டின் விசேஷம் இத்துடன் முடிந்துவிடவில்லை!” என்கிறார். அப்படியென்ன விசேஷம்? முதலாவதாக, இந்தத் தானியங்கி குப்பைத் தொட்டியை பயமின்றி அப்படியே தெருக்களில் இறக்கி விட்டுவிடலாம். இதில் `சென்சார்களும்’, `காமிராக்களும்’ பொருத்தப்பட்டுள்ளதால், தான் எங்கே செல்கிறோம் என்று இதனால் உணர முடியும்.

இது தனது பாதையை `பார்த்து’ அறிந்து, நிலையான பொருட்கள் மீது மோதாமல் செல்லும். அதேபோல பாதசாரிகள், சைக்கிள் ஓட்டிகள்… ஏன், தெருநாய் வந்தால் கூட விலகிச் சென்றுவிடும். இந்த குப்பைத் தொட்டி `காணும்’ காட்சிகள் வெளி கட்டுப்பாட்டு மையம் ஒன்றுக்கும் தொடர்ந்து அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கும். அங்கிருந்து பார்த்தும் இந்த `ரோபோ’ குப்பைத் தொட்டியைக் கட்டுப்படுத்தலாம், திசை மாற்றலாம்.

குப்பைத் தொட்டியை யாரும் திருடிச் சென்றுவிடாமலும், அதைச் சேதப்படுத்திவிடாமலும் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து கண்காணிக்கலாம். `டஸ்ட்கார்ட்’ இயங்கும் பகுதியில் ஒரு `வயர்லெஸ் நெட்வொர்க்’ அமைக்கப்பட்டிருக்கும். அதிலிருந்து அவ்வப்போது தேவையான தகவல்களைப் பெற்று இது நகரும். சுருக்கமாகச் சொல்லப் போனால் இது ஒரு புத்திசாலித்தனமான குப்பை அள்ளும் `எந்திரன்’! நம்மூருக்கு `இவன்’ எப்போது வருவான்?

இரண்டாம் உலகப்போரின் போது குண்டு வீசப்பட்டதன் நேரடி வீடியோ டேப் வெளியீடு.!!

|


இரண்டாம் உலகப்போரின் போது லண்டன் நகர் மீது குண்டு வீசப்பட்டதன் நேரடி வீடியோ டேப் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போர் (1940) நடந்து கொண்டிருந்த போது லண்டனில் பிளிட்ஸ் மற்றும் ஆக்ஸ்போர்டு தெரு ஆகியவற்றின் மீது குண்டுகள் வீசப்பட்டன.

இந்நிலையில் இரண்டாம் உலகப்போர் நடைபெற்றதன் 70-ம் ஆண்டு விழா பிரிட்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் கவுன்சில் சார்பில் கொண்டாப்பட்டது. அப்போது அரிய வகை வீடியோ டேப்கள் வெளியிடப்பட்டன. அதில் பிரிட்டனின் விமானப்படைப்பிரிவில் பணியாற்றிய வீரர் ஒருவரின் வீட்டிலிருந்து திரைப்படம் எடுக்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டது. இதனை சோதனை செய்து பார்த்தில் இரண்டாம் உலக்போரின் போது குண்டு வீசப்பட்டதை நேரடியாக வண்ண படமாக எடுக்கப்பட்டது தெரியவந்தது.

22-வது முறையாக தந்தையாகும் தெ.ஆப்பிரிக்க அதிபர்.!!

|


டர்பன்: தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமாவின் காதலி கர்ப்பமாக இருக்கிறார். இதன் மூலம் ஜூமா 22வது முறையாக தந்தையாகியுள்ளார். தனது கர்ப்பிணிக் காதலியை வருகிற டிசம்பரில் அவர் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாராம்.

68 வயதாகும் அதிபர் சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அவருடன் ஜோடியாக சென்றார் காதலி போன்ஜிவி குளோரியா நகேமா. இதனால் ஜூமாவின் மற்ற மூன்று மனைவியரும் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் நகேமா கர்ப்பமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அடுத்த வருடம் குழந்தை பிறக்குமாம்.

இந்த தகவலை குளோரியாவின் தோழிதான் வெளியிட்டுள்ளார். குளோரியாவுக்கு அதிபர் மூலமாக ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. இப்போது 2 குழந்தைகளாகி விட்டதால் குளோரியாவை, வருகிற டிசம்பர் மாதம் ஜூமா முறைப்படி மணக்கவுள்ளார். இதையடுத்து ஜூமாவின் மனைவியர் எண்ணிக்கை 4 ஆக உயருகிறது.

சமீபத்தில் தான் ஜூமாவின் 2-வது மனைவி ஒரு ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார். இது ஜூமாவின் 21-வது குழந்தையாகும். ஆனால் இந்த குழந்தை ஜூமாவின் 2-வது மனைவிக்கும் அவரின் மெய்க்காப்பாளருக்கும் இருந்த உறவால் பிறந்தது என்று செய்திகள் வெளியான. இதனால் அதிர்ச்சி அடைந்தார் ஜூமா. ஆனால் இது தவறான வதந்தி என்று அவர் மறுத்தார்.

இவர் ஜூமாவின் குடும்ப நண்பரின் மகள் ஆவார். இந்த உறவு குறித்து பின்னர் ஜூமா பகிரங்கமாக வருத்தமும், மன்னிப்பும் கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் மாதம் 3-ம் உலகப் போர் மூளும் பீதியை கிளப்பும் நாஸ்டர்டாம் கணிப்பு.!!

| Monday, September 6, 2010


14-ம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டில் வாழ்ந்தவர் நாஸ்டர்டாம். எதிர்காலத்தை பற்றி கணித்து கூறும் ஞானியான இவர் 5079-ம் ஆண்டு வரை உலகில் என்னென்ன நடக்க போகிறது என்று கணித்து கூறியுள்ளார். அவர் கணித்தபடி முதல் உலகப்போர், 2-ம் உலகப் போர் மற்றும் பல்வேறு பூகம்பங்கள், இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டு உள்ளன.

சமீபத்தில் நடந்த இரட்டை கோபுரம் தகர்ப்பு, ரஷிய அணுசக்தி நீர் மூழ்கி கப்பல் மூழ்கியது போன்ற சம்பவங்களையும் அவர் கணித்து கூறி இருந்தார்.

இரும்பு பறவைகள் மூலம் அமெரிக்காவில் கட்டிடங்கள் இடிக்கப்படும் என்றார். அவர் சொன்னது போல விமானத்தை விட்டு மோதி இரட்டை கோபுரத்தை தகர்த்தனர். விமானத்தை தான் அவர் இரும்பு பறவை என்று கூறி இருந்தார்.

அதே போல “குர்ஸ்க்” தண்ணீரில் மூழ்க போகிறது என்று கூறி இருந்தார். அவர் சொன்னது போல ரஷிய நீர் மூழ்கி கப்பல் குர்ஸ்க் கடலில் மூழ்கியது.

இனி வரும் ஆண்டுகளில் நடக்க போவதாக அவர் கூறும் விஷயங்கள் தான் நம்மை மிகவும் அச்சுறுத்தும் வகையில் இருக்கிறது.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் 3-ம் உலகப் போர் மூளப் போகிறது, இந்த போர் 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை நடக்கும் ஆரம்பத்தில் அணு குண்டுகள் மூலம் தாக்குதல் நடக்கும். அடுத்து ரசாயன ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடக்கும் என்று கூறியுள்ளார். இந்த போரில் ஐரோப்பாவில் பெரும் பகுதி அழிந்து விடும். ரசாயன தாக்குதல் விளைவால் போருக்கு பிறகு மக்களுக்கு தோல் புற்றுநோய் ஏற்பட்டு பெரும் பாதிப்பு வரும் என்று அவர் கூறி இருக்கிறார்.

நவம்பர் மாதத்துக்கு இன்னும் 1 மாதம்தான் இடைவெளி இருக்கிறது. அவர் கணித்தபடி போர் மூளுமா? இல்லையா? என்பது போக போகத்தான் தெரியும்.

அதே போல இந்த ஆண்டு இறுதிக்குள் உலக தலைவர்கள் 4 பேரை கொல்ல முயற்சி நடக்கும் இதில் அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷிய பிரதமர் புதின், ஜெர்மனி அதிபர் மார்கல், இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின், பிரான்சு அதிபர் சார்கோசி ஆகியோரில் இந்த 4 பேர் இருக்கலாம் என்று கருதப்படுகிது.

2018-ம் ஆண்டு சீனா தான் உலகின் வல்லரசு நாடாக இருக்கும் என்றும் நாஸ்டர்டாம் கூறி இருக்கிறார்.

2033-ல் இருந்து 2045 வரை துருவ பகுதி பனிக்கட்டிகள் பெருமளவு உருகும். இதனால் கடல் மட்டம் உயர்ந்து பல பகுதிகள் அழியும் என்றும் அவர் கணித்துள்ளார்.

2046-ல் இருந்து 2070க் குள் மருத்துவ உலகில் பெரும் புரட்சி ஏற்படும். மனிதனின் எந்த உறுப்பையும் செயற்கையாக உருவாக்கி விடுவார்கள் என்றும் நாஸ்டர்டாம் சொல்லி இருக்கிறார்.

இப்படி 5079 ம் ஆண்டு வரை பல்வேறு விஷயங்களை கணித்து கூறி இருக்கிறார். இறுதியாக 5079-ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

பேஸ்புக் வாயிலாக எதிர்ப்பு திருமணத்தை நிறுத்திய பிரான்ஸ் அமைச்சர்.!!

|


பாரீஸ்: பிரான்ஸ் அரசின் புதிய குடியேற்ற சட்டத்திற்கு பல தரப்புகளிலிருந்து பேஸ்புக் வாயிலாக எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து தனது திருமணத்தையே குடியேற்ற அமைச்சர் தள்ளி வைத்துள்ளார். பிரான்ஸ் அதிபர் சர்கோஸி சமீபத்தில் புதிய குடியேற்ற சட்டம் கொண்டுவந்தார். இதற்கு நாடுமுழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.

மேலும் இணையதளம் மற்றும் பேஸ்புக் வாயிலாக தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர். மேலும் உள்நாட்டு பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படப்போகிறது என்றும் கூறினர். சனிக்கிழமை நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்நாட்டு குடியேற்றத்துறை அமைச்சர் எரிக் பெஸ்சியன் (52) கடந்த ஞாயிறன்று திருமணம் செய்வதாக அறிவித்திருந்தார்.

தற்போது இந்த பிரச்னை பெரிதாக உருவெடுத்துள்ளதால் தனது திருமண தேதியை தள்ளி வைத்துள்ளதாக உள்ளூர் பத்தரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. குடியேற்றத்துறை அமைச்சர் எரிக் பெஸ்சியன் இது குறித்து கூறுகையில், என்னுடைய அரசியல் வாழ்வில் ஏற்பட்டுள்ள பின்னடைவிற்கு எனது முதல் மனைவி, குழுந்தை மற்றும் புதிதாக திருமணம் செய்யவுள்ள மனைவி ஆகியோரை காரணமாக கூறவிரும்பவில்லை என்றார்.

"ஆக்ஸ்போர்டு டிக்ஷ்னரி' அச்சிடப்படுமா?ஆன்-லைனில் பயன்பாடு அதிகரிப்பு.!!

|


"ஆக்ஸ்போர்டு அகராதிக்கு மவுசு குறைந்து விட்டதால் இனி ஆன்-லைனில் மட்டும் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆங்கில மொழியின் அதிகாரப்பூர்வ வழிகாட்டியாக ஆக்ஸ்போர்டு அகராதி, நூறாண்டுகளுக்கும் மேலாக புகழ்பெற்று விளங்குகிறது. இதுவரை ஆக்ஸ்போர்டு டிக்ஷ்னரியின் பதிப்புகள் அச்சிடப்பட்டு புத்தக வடிவில் வெளியிடப்பட்டு வருகிறது. புத்தக பதிப்புகளின் விற்பனை வெகுவாக குறைந்து வருகிறது. எனவே ஆக்ஸ்போர்டு டிக்ஷ்னரி எதிர்காலத்தில் ஆன்-லைனில் மட்டும் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பிரஸ் தலைமை நிர்வாக அதிகாரி நைஜல் போர்ட்வுட் கூறியதாவது: அகராதி புத்தக விற்பனை வெகுவாக குறைந்துவிட்டது. அதேநேரத்தில், ஆன்-லைன் டிக்ஷ்னரிக்கு வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. மாதந்தோறும் 20 லட்சம் பேர் எங்களது ஆன்-லைன் பதிப்பை பயன்படுத்துகின்றனர்.இதற்காக ஆண்டுக்கு 14 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆக்ஸ்போர்டு டிக்ஷ்னரி புத்தக பதிப்பு 20 தொகுதிகளை கொண்டது. அதில் வார்த்தைகளை தேடி அர்த்தம் கண்டுபிடிப்பதில் பல சிரமங்கள் உள்ளன. அதேவேளை ஆன்-லைன் டிக்ஷ்னரியில் வார்த்தைகளுக்கு அர்த்தம் கண்டுபிடிப்பது மிக எளிது. ஒரு சில வினாடிகளில் வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்துவிடும்.மேலும், கம்யூட்டர் மற்றும் லேப்-டாப் பயன்பாடு அதிகரித்து விட்டதால் ஆன்-லைன் டிக்ஷ்னரியின் பயன்பாடு கணிசமாக உயர்ந்துள்ளது. எனவே ஆக்ஸ்போர்டு டிக்ஷ்னரியை எதிர்காலத்தில் ஆன்-லைனில் மட்டும் வெளியிட முடிவு செய்துள்ளோம். ஆனால், ஆக்ஸ்போர்டு டிக்ஷ்னரி அச்சிடுவதை நிறுத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.இவ்வாறு போர்ட்வுட் கூறினார்.


கன்னித்தன்மையை இழக்காத 106 வயது இங்கிலாந்து பாட்டி.!!

| Sunday, September 5, 2010


திருமணத்துக்கு முன்பாகவே இணையதளம் மூலம் கன்னித்தன்மையை ஏலம் விடும் டீன் ஏஜ் பெண்களுக்கு மத்தியில், 106 வயது பாட்டி ஒருவர் கன்னித்தன்மையை இழக்காமல் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபடாத காரணத்தால் உடல் ஆரோக்கியமுடன் இருப்பதாக அவரே தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் எடின்பர்க் நகரைச் சேர்ந்தவர் இசா பிளித். இவர் சனிக்கிழமை 106வது பிறந்தநாளை கொண்டாடினார். இதுவரை செக்சில் ஈடுபட்டதே இல்லை என தெரிவித்துள்ளார்.

முத்தத்தைக்கூட பரிமாறியதில்லை என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது. செக்சில் ஈடுபடாததால் நான் இன்னமும் ஆரோக்கியமாக இருக்கிறேன். என்னைப் போல வேறு யாராவது இருக்கிறார்களா என்பது தெரியாது. எனது வாழ்நாளில், காதலிக்க வேண்டும் என்ற எண்ணமோ, செக்சில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணமோ வந்ததே இல்லை என இசா தெரிவித்துள்ளார். இசா, முன்னணி விஸ்கி தயாரிப்பு நிறுவனத்தில் 35 ஆண்டுகள் உயர் பதவியில் பணியாற்றி உள்ளார்.

அடிக்கடி சர்ச் மற்றும் பிளவர் கிளப்புக்கு செல்லும் பழக்கம் கொண்ட இவர், கிறிஸ்தவ பாடல் குழுவிலும் இடம் பெற்றுள்ளார். கோல்ப் விளையாடுவது, தோட்டங்களை சீரமைப்பது இவரது பொழுதுபோக்கு. இவைதான் இவர் காதலித்த முக்கிய அம்சங்கள். இசாவுக்கு 6 சகோதர சகோதரிகள் உள்ளனர். இவர்களில் திருமணம் செய்துகொள்ளாதவர் இசா மட்டும்தான். இத்தனைக்கும் இவர் ஷெரி வகை ஒயினை விரும்பி சாப்பிடுவார். தனியார் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருந்ததால் இளமை காலத்தில் பிஸியாகவே இருந்தார். இவர் எந்த விஷயத்துக்கும் வருத்தப்பட்டதே இல்லை. இதனால்தான் இன்றளவும் ஆரோக்கியமாக உள்ளார்ÕÕ என இசாவின் சகோதரி மகள் ஷீனா கேம்ப்பெல் தெரிவித்துள்ளார்.

பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பது 54 வயதில்தானாம்.!!

| Saturday, September 4, 2010


வருமானம் அதிகரித்தாலும் வாழ்வில் மகிழ்ச்சி இருக்கிறதா? என்பது இப்போது கேள்விக்குறியாக உள்ளது. பெண்களைப் பொறுத்தவரை 54 வயதில்தான் மகிழ்ச்சியடைவதாக ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. அதேநேரம், அதிக கவலை கொள்வது 45 வயதில்தான் என தெரிய வந்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னணி வங்கியான பர்ஸ்ட் டைரெக்ட் பெண்களின் வாழ்வில் மகிழ்ச்சிÕ என்ற தலைப்பில் ஒரு ஆய்வு மேற்கொண்டது. அதன் விவரம்:

பொதுவாக, 45 முதல் 54 வயதுக்குள் பெண்களின் கவலை உச்சத்தை அடைகின்றது. 55 முதல் 64 வயதுக்குட்பட்ட காலத்தில் அவர்களுடைய கவலை 36 சதவீதம் குறைகிறது. இதன்மூலம் 54 வயதினர் அதிக மகிழ்ச்சியை அனுபவிக்கிறார்கள். மற்ற எல்லா வயதினரையும்விட, இந்த வயதினர் மகிழ்ச்சியாக இருப்பது தெரிய வந்துள்ளது.

பெண்கள் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படுவதற்கு 4 முக்கிய காரணங்களை கூறுகின்றனர். அதில் ஒன்று, புதிய வேலை கிடைப்பது. திருப்தியில்லாத உறவை துண்டிப்பது, மோசமான நட்பை கழட்டி விடுவது, 3 மாதங்களுக்கு மேல் சுற்றுப் பயணம் மேற்கொள்வது ஆகியவை மற்ற 3 காரணங்கள்.

உலகை படைத்தது நிச்சயம் கடவுள் இல்லையாம்.!!

|


லண்டன் : ‘உலகத்தை படைத்தது நிச்சயம் கடவுளல்ல; இயற்கை தனக்கு தானே படைத்துக் கொண்டதுதான் உலகம்’’ என்று இங்கிலாந்து இயற்பியல் விஞ்ஞானி ஹாகிங் தெரிவித்துள்ளார். அண்ட சராசரம் பற்றி ஆராய்ந்து புத்தகம் எழுதுவதில் அவர் பிரபலம். 1988ல் அவர் எழுதிய ‘அ ப்ரீப் ஹிஸ்ட்ரி ஆப் டைம்’ என்ற ஆராய்ச்சி புத்தகம் சர்வதேச அளவில் விற்பனையில் சக்கை போடு போட்டது. இப்போது அவர் ‘தி கிராண்ட் டிசைன்’ என்ற புத்தகத்தை விரைவில் வெளியிடுகிறார். அதில் இடம்பெற்றுள்ள சில அம்சங்களை லண்டனைச் சேர்ந்த ‘தி டைம்ஸ்’ நாளிதழ் வெளியிட்டுள்ளது.

புத்தகத்தில் ஸ்டீபன் ஹாகிங் கூறியிருப்பதாவது: புவி ஈர்ப்பு தத்துவத்தை சர் ஐசக் நியூட்டன் வெளியிட்டார். அதுதான் அண்டவெளியின் ஆதாரம். ஈர்ப்பு சக்திதான் உலகை தாங்கிப் பிடிக்கிறது. அதன் தொடர்ச்சியில்தான் உலகம் உருவானது. புவியீர்ப்பு விதியின்படிதான் உலகம் நிலைத்திருக்கிறது. அதே விதிப்படிதான் தன்னைத் தானே அது படைத்துக் கொண்டிருக்க முடியும். அறிவியல்ரீதியாக உலகைப் பார்ப்பவர்களுக்கு, அறிவியலை புரிந்து கொண்டவர்களுக்கு அதை உருவாக்கியதில் இறைவனின் ஐடியா இருப்பதாக நம்ப வேண்டிய அவசியம் இருந்ததில்லை, இருப்பதில்லை என்று புத்தகத்தில் ஸ்டீபன் ஹாகிங் கூறியுள்ளார். அறிவியல் ஆராய்ச்சியில் டிவி நிகழ்ச்சிகள், டாக்குமென்டரிகளில் உலக புகழ்பெற்றவர் ஹாகிங்.

இன்டெர்நெட் குற்றம் டோக்கியோ முதலிடம்.!!

| Friday, September 3, 2010


டோக்கியோ: இன்டெர்நெட் குற்றம் புரிவதில் ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகரம் முதலிடத்தில் உள்ளதாக தேசிய போலீஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது. அதன் செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: இந்த ஆண்டின் முதல் ஆறுமாத காலகட்டத்தில் குற்றாவளிகளின் எண்ணிக்கை 2ஆயிரத்த 444 ஆக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இத்தகைய குற்றவாளிகளின் எண்ணிக்கை 586 மட்டுமே.

தேசிய போலீஸ் ஏஜென்சியின் இத்தகைய சர்வே எடுக்கும் பணி கடந்த 2004-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆறுமாத கால இடைவெளியில் தொடர்ந்து நடத்தி வருகிறது.18 வயதிற்குட்ட குழந்தை குற்றவாளிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 212 ஆக இருந்தது தற்போது 329 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இத்தகைய குற்றவாளிகள் உருவாகுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது தடைசெய்யப்பட்ட படங்களை முறை கேடாக பார்ப்பதும், மற்றவர்களுடன் ஷேரிங் செய்து கொள்வதுமே காரணம் என போலீஸ் ஆய்வில் தெரிவிக்கிறது.

2009-ல் முதல் ஆறு மாத கால கட்டத்தில் 56 இருந்த எண்ணிக்கை இரண்டாவது ஆறு மாதகாலத்தில் 75 ஆக கூடியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட குற்றங்களின் எண்ணிக்கை குற்றத்தை ஊக்குவிப்பதற்காக அல்ல. இருப்பினும் இனிமேல் இது போன்ற குற்றங்களை வளர விடாமல் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நோக்கம் என அதன் செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளது.

2 மணி நேரத்தில் காசநோயை கண்டுபிடிக்க முடியும் நிபுணர்கள் தகவல்.!!

|


“டி.பி.” எனப்படும் காச நோய் மிக கொடிய நோயாகும். இந்த நோய் கிருமிகளை கைதேர்ந்த நிபுணர்களால் மைக்ராஸ்கோப் மூலம் மட்டுமே கண்டுபிடித்து வருகின்றன. இது கடந்த 125 ஆண்டு காலமாக நடை முறையில் உள்ளது.

தற்போது புதிய கருவிகள் மற்றும் தொழில் நுட்பம் மூலம் காசநோயை கண்டறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிநவீன பரிசோதனை

நியூ இங்கிலாந்து ஜெர்னல் ஆப் மெடிசின் என்ற நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் காசநோய் என சந்தேகிக்கப்படும் நபர்கள், அந்த நோய்க்கான மருந்து சாப்பிடுபவர்கள் என 1730 பேரிடம் 3 விதமான அதிநவீன பரிசோதனைகள் மேற்கொண்டனர்.

எக்ஸ்பர்ட், எம்.டி.பி., ஆர்.ஐ.எப். என்ற பரிசோதனைகள் நடத்தினர். அதன்மூலம் 98 சதவீதம் பேருக்கு காசநோய் உள்ளதா என 2 மணி நேரத்தில் கண்டுபிடித்தனர்.

தினமும் 40 சிகரெட் பிடிக்கும் 2 வயது சிறுவன்..!

|


இந்தோனேஷியாவில் உள்ள சும்த்ரா தீவை சேர்ந்த 2 வயது சிறுவன் ஆர்டி ரிஷால். இவன் தினமும் 40 சிகரெட் பிடிப்பதாக இண்டர்நெட்டில் படத்துடன் செய்தி வெளியானது. இது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரிஷால் 6 மாத குழந்தையாக இருந்தபோது, அவனது தந்தை முதன் முதலாக ஒரு சிகரெட்டை பற்ற வைத்து அவனுக்கு புகை பிடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார். இதை தொடர்ந்து அவன் தினமும் 2 பாக்கெட் சிகரெட் பிடிக்க தொடங்கினான்.

அதிலும், அவனுக்கு திருப்தி ஏற்படாததால் தினமும் 40 சிகரெட் வரை பிடித்து வந்தான். இந்த செய்தி வெளி யானதும் இந்தோனேஷியாவில் புகையிலையை பயன்படுத்து வோர் எண்ணிக்கை அதிகம் என தெரிய வந்தது.

சிகரெட்டால் பாதிக்கப்பட்ட சிறுவன் ரிஷாலை அப்பழக்கத்தில் இருந்து விடுவிக்க இந்தோனேஷிய அரசு ஜகார்த்தா ஆஸ்பத்திரியில் தங்க வைத்து சிகிச்சை அளித்தது. அதை தொடர்ந்து தற்போது அவன் அப்பழக்கத்தில் இருந்து மீண்டு விட்டான்.

இத்தகவலை, இந்தோனேஷிய குழந்தைகள் பாதுகாப்பு தேசிய கமிஷனர் செயலாளர் அரிஸ்ட் மெர்தெகா சிரெய்ட் தெரிவித்துள்ளார்.

ஒழுங்கா பராமரிக்கிறீங்களா தலை முதல் கால் வரை.. எல்லாத்துக்கும் வயசாகுது.!!

|


பளீச் என்று எரியும் பல்பாக இருந்தாலும், பைக்காக இருந்தாலும், வலுவாக இத்தனை மணி நேரம், இத்தனை நாள்தான் இயங்க முடியும். அதுபோலத்தான் நம் உடலும். உடலில் உச்சந் தலை முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு முக்கிய உறுப்புக்கும் தனித்தனி வயது உண்டு. பிரான்ஸ் மருத்துவ நிபுணர்கள் ஆய்வில் கிடைத்த ருசிகர தகவல்கள்:

*மூளை:மூளையில் உள்ள நரம்பு உயிரணுக்களின் எண்ணிக்கை 10,000 கோடி நமது ஒவ்வொரு எண்ணம், சொல், செயல்களுக்கு இவற்றின் கட்டளைகள் தான் காரணம். 20 வயது வரை தான் இதன் சுறுசுறுப்பு இருக்கும். 20 ல் இருந்து இதன் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். 40 வயதில் இருந்து ஒரு நாளைக்கு 10,000 உயிரணுக்கள் வீதம் சரியும். நினைவாற்றல் உட்பட பல செயல்கள் செயலிழக்க இது தான் காரணம்.

குடல்:குடலுக்கு 55 வயது வரை தான் முழு ஆரோக்கியம். அப்போது குடல், கல்லீரல், சிறுகுடல், இரைப்பையில் ஜீரணத்துக்கான நொதிநீர் சுரப்பது குறைய ஆரம்பிக்கும். இதனால், அஜீரணம், வயிற்றுப்பிரச்னை போன்றவை தலைகாட்டும்.

*மார்பகம்: பெண்களுக்கு மார்பகம் 35 வயதில் சுருங்க ஆரம்பிக்கும். அதன் தசைகள், கொழுப்புத்தன்மை குறைய ஆரம்பிக்கும்; அதனால், பருத்த மார்பகம் சுருங்க ஆரம்பிக்கும்.
*சிறுநீர்ப்பை : இது வயசாவது 65 ல் ஆரம்பிக்கிறது. 30 வயதில் 2 கப் சிறுநீர் தேக் வைக்கும் அளவுக்கு கொள்ளளவு இருக்கும்; 65 ல் ஒரு கப் தான் தேங்கும் அளவுக்கு சுருங்கி விடும்.

*நுரையீரல்: 20 வயது வரை தான் முழுவீச்சில் இயங்கும். அதன் பின், இடுப்பு எலும்பு பகுதி நெருக்கிக்கொள்ள, நுரையீரல் சக்தி குறைந்து, மூச்சு , உள்ளிழுத்து வெளியேவிடும் அளவு குறையும். 40 வயசுக்கு மேல், சில அடிதூரம் நடந்தால் மூச்சு வாங்குவதற்கு காரணம் இது தான்.

*குரல் : தொண்டையில் உள்ள லாரினக்ஸ் என்ற மெல்லிய திசுக்கள் நீடிக்கும் வரை தான் குரலில் இனிமை இருக்கும். 65 வயதுக்கு பலவீனமாகி, குரல் ‘கரகர’ தான்.

*கண் : பத்திரிக்கை படிக்கும் போதும், டிவி பார்க்கும் போதும் கண்களை இடுக்கி, பாடாய்ப்படுத்தி பார்ப்பர் சிலர்; அடடா, வயது 40 ஆகி விட்டது என்று புரிந்து கொள்ளலாம். அந்த வயதில் தான் பார்வை வலிமை குறைய ஆரம்பிக்கிறது.

*இருதயம் : ரத்தத்தை உள்வாங்கி, மற்ற உறுப்புகளுக்கு அனுப்பும் சக்தி படைத்தது இருதய பம்ப்; ரத்தத்தை விரைவாக அனுப்பும் நெகிழ்திறன் கொண்ட இந்த பம்ப், 40 வயதில் பலவீனமடைய ஆரம்பிக்கிறது. அதனால், மற்ற உறுப்புகளுக்கு ரத்தம் பாயும் வேகமும் குறைகிறது.

*கல்லீரல் : இந்த ஒரு உறுப்பு மட்டும் தான் 70 வயது வரை சூப்பர் இயக்கத்துடன் உள்ளது. குவாட்டரை நினைக்காதவரை இதன் பலம் ஆண்டுக்கணக்கில் நீடிக்கும்.

*சிறுநீரகம் : ரத்தத்தை சுத்தப்படுத்தி பிரிக்கும் வேலையை இதன் ‘நெப்ரான்ஸ்’ என்ற திசுக்கள் செய்கின்றன. 50 வயதில் இது வலுவிழக்க ஆரம்பிக்கிறது.

*எலும்புகள் : 25 வயது வரை தான் எலும்புகள் வலுவாக இருக்கும். அதன் பின் 35 ல் இருந்து பலவீனமடைய ஆரம்பிக்கும்.

*பற்கள் : எச்சில் ஊறும் வரை தான் பற்களுக்கு வலிமை. பாக்டீரியாக்களையும் விரட்டியடிக்கும். நாற்பது வயதில் எச்சில் ஊறுவது குறைய துவங்கும். அதனால் தான் சிலரிடம் கப்ஸ்.
*தசைகள் : முப்பது வயதில் தசைகள் 0.5 முதில் 2 சதவீதம் வரை ஆண்டுக்கு குறைய ஆரம்பிக்கும். தினசரி பயிற்சி, உடல் உழைப்பு தான் இதில் இருந்து காக்கும்.
*தோல் : தோல்பகுதி, 25 வயதில் இருந்தே பலவீனமடைய ஆரம்பிக்கும்.

*தலைமுடி : முப்பது வயதில் இருந்தே தலைமுடி கொட்ட ஆரம்பிக்கும் முடி தோன்றும்.

அமெரிக்காவில் 49மில்லியன் பேர் உணவின்றி தவிப்பு.!!

| Thursday, September 2, 2010


வாஷிங்டன்: அமெரிக்காவில் வசிப்பவர்களில் 49மில்லியன் பேர் போதிய உணவின்றி தவித்து வருகின்றனர். அமெரிக்க டயடிக் அசோஷியேசன் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் கூறியிருப்பதாவது: பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு போதிய வேலையின்மை, முறையான வரவு-செலவின்மை, மனஅழுத்தம், குடும்ப பிரச்சனை, விலைவாசி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர்களுக்கு சரியான உணவு கிடைப்பதில்லை.

மேலும் பெரும்பாலான நகரங்களில் வீட்டு பராமரிப்பு, மருத்துவ செலவு, குழந்தை பராமரிப்பு மற்றும் அன்றாட செலவுகள் போன்றவை அவர்களின் வருமானத்தை காட்டிலும் அதிகமாக உள்ளன. உதாரணமாக சில நகரங்களில் ஒரு சிகரெட் பாக்கெட்டின் விலை 7டாலராக உள்ளது. இதபோன்ற காரணங்களால் அங்கு வசிப்பவர்களில் 49மில்லியன் பேருக்கும் அதிகமான பேர், அதாவது 3ல் ஒருவருக்கு போதிய உணவு கிடைப்பதில்லை என்று தகவல் வெளயிட்டுள்ளது.

ஆராய்ச்சிக்காக ரூ. 70 கோடி நன்கொடை அளித்த 'ஹாரி பாட்டர்' ஜே.கே.ரவுலிங்.!!

|


மருத்துவ ஆராய்ச்சிக்காக ரூ. 70 கோடியை நன்கொடையாக அளித்துள்ளார் ஹாரி பாட்டர் கதை புகழ் ஜே.கே.ரவுலிங்.

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ரவுலிங். சிறந்த எழுத்தாளர். இவரது ஹாரி பாட்டர் நூல்கள் உலகப் புகழ் பெற்றவை. இந்த கதைகள் மூலம் மிகப் பெரிய கோடீஸ்வரியாக உருவெடுத்தவர் ரவுலிங்.

இவரது தாயார் பெயர் அன்னா. இவர் ஸ்கிளீராஸிஸ் (sclerosis) தாக்கி உயிரிழந்தார்.

ஸ்கிளீராஸிஸ் வந்தவர்களுக்கு மூளையின் நரம்பு செல்களை தாக்கப்பட்டு செயலிழந்து போகும். முதுகெலும்பும் செயலிழந்து போகும். நரம்பு செல்கள்தான் நமது உடலின் செயல்பாட்டுக்கான கட்டளைகளை ஆக்ஸான்கள் எனப்படும் நீண்ட கற்றைகள் மூலம் அனுப்புகிறது. இந்த ஆக்ஸான்கள் மீது மயலின் மூடியபடி இருக்கும். ஸ்கிளீராஸிஸ் வந்தவர்களுக்கு, இந்த மயலின் பாதிக்கப்படும். மேலும், உடலின் எதிர்ப்பு சக்தியும் பாதிக்கப்படும். மயலின் உறுதித்தன்மையை இழந்து, செயலிழந்து போனால், ஆக்ஸான்கள் செயலிழந்து கட்டளைகள் போவது தடைபட்டுப் போகும்.

இந்த நோய் குறித்த ஆய்வுக்காகவே தனது தாயார் பெயரில் ஒரு மருத்துவ ஆராய்ச்சி மையத்தை தொடங்கியுள்ளார் ரவுலிங். அதற்காக ரூ. 70 கோடி நிதியை ஒதுக்கியுள்ளார்.

எடின்பரோ பல்கலைக்கழகத்தில் இந்த மையம் அமைகிறது. சயரோஸிஸ் தவிர பர்கின்சன் வியாதி, அல்ஸீமர் ஆகிய நோய்கள் தொடர்பான மருந்துகள் குறித்த ஆய்வும் இங்கு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் காப்பி குடித்தால் அதிக நாள் உயிர் வாழலாம்.!!

|


காப்பி குடிப்பது உடல் நலத்துக்கு தீங்கானது என்று டாக்டர்கள் கூறு கின்றனர். ஆனால் இப்போது வந்துள்ள ஒரு மருத்துவ ஆய்வு காப்பி குடிப்பது நல்லது என்று கூறுகிறது.

இது தொடர்பாக கிரீஸ் நாட்டில் உள்ள ஏதென்ஸ் பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகள் ஒரு ஆய்வு நடத்தி உள்ளனர்.

65 வயதில் இருந்து 100 வயதுக்கு உட்பட்ட 485 பேரிடம் அவர்கள் ஆய்வு நடத்தினார்கள். அவர்களை தினமும் 1 அல்லது 2 கோப்பை காப்பியை குடிக்க கொடுத்து உடலில் ஏற்படும் மாற்றத்தை ஆய்வு செய்தனர்.

காப்பி குடிப்பதன் மூலம் அவர்களுடைய ரத்தக்குழாய் களில் நெகிழ்வு தன்மை ஏற்பட்டு ரத்த ஓட்டம் சீராக இருந்தது. இதில் ரத்த குழாய் உள்ளிட்ட அனைத்து ரத்த குழாயிலுமே இந்த நெகிழ்வு தன்மை இருந்தது. அதாவது இளைஞர்களுக்கு எப்படி சீரான ரத்த ஓட்ட தன்மை இருந்தோ அதேபோல இவர் களுக்கும் ரத்த ஓட்டங்கள் இருந்தன.

எனவே காப்பி குடிப்பதன் மூலம் ரத்த ஓட்ட குறைபாடு களை குறைக்கலாம். இதய நோய் ஏற்படுவதையும் தடுக் கலாம். எனவே அதிக நாள் உயிர் வாழ வாய்ப்பு இருக்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இறந்ததாக கூறப்பட்ட குழந்தை : தாயின் அரவணைப்பால் உயிர் பிழைத்த அதிசயம்.!!

| Wednesday, September 1, 2010


சிட்னி : பிறந்த அடுத்த சில நிமிடங்களிலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட குழந்தை, தாயின் கத, கதப்பான அரவணைப்பாலும், மெல்லிய விசும்பலாலும் உயிர் பிழைத்த அதிசயம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்தவர் டேவிட். இவரது மனைவி கேட், ஏழுமாத கர்ப்பமாக இருந்தார். தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால், அந்த குழந்தைக்கு ஜேமி என, பெயர் சூட்டவும் முடிவு செய்தனர். கேட்டுக்கு சமீபத்தில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், அந்த குழந்தையிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. டாக்டர்கள் சில சிகிச்சைகளை அளித்தனர். குழந்தையின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இதைக் கேட்ட டேவிட்டும், கேட்டும் அழுது புலம்பினர். தன் பச்சிளம் குழந்தை இறந்துவிட்டதை நம்ப முடியாத கேட், குழந்தையை மார்போடு கட்டி அணைத்துக் கொண்டு, முகத்தோடு முகம் வைத்து கொஞ்சியபடி கண்ணீர் வடித்தார். டேவிட்டும் அழுது கொண்டே, குழந்தையின் தலையை மென்மையாக தடவிக் கொடுத்தார். இரண்டு மணி நேரமாக இந்த பாசப் போராட்டம் நீடித்தது.

குழந்தையை இரண்டு மணி நேரமாக மார்போடு அணைத்தபடி, அழுதுகொண்டிருந்த கேட், குழந்தையின் காதுக்கருகே சென்று மெல்லிய குரலில் விசும்பலுடன் பேசினார். அப்போது தான், யாரும் எதிர்பாராத அந்த அதிசயம் நடந்தது. இறந்து விட்டதாக கூறப்பட்ட அந்த குழந்தையின் உடலில் சிறிய அசைவு காணப்பட்டது. அந்த பச்சிளம் குழந்தையின் கைகள் மெதுவாக நீண்டு, தன் தாயின் கரங்களை இறுக பற்றியது. இந்த ஆச்சரிய நிகழ்வை நம்ப முடியாமல் கேட், சில நிமிடங்கள் திகைத்துப் போனார். அவரது கணவர் டேவிட், உடனடியாக ஓடிச் சென்று டாக்டரை அழைத்து வந்தார். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், "இது வழக்கமாக நடப்பது தான். இறந்து விட்ட குழந்தை, மீண்டும் பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை'என, உறுதியாக தெரிவித்து விட்டனர்.

தன் குழந்தையை விட்டுக் கொடுக்க விரும்பாத கேட், மார்போடு அணைத்துக் கொண்டு, அந்த குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டினார். அதை குழந்தை, ஆர்வத்துடன் குடித்தது. அங்கு நின்றிருந்த டாக்டர், இதை நம்ப முடியாமல் மீண்டும் குழந்தையை பரிசோதித்தார். அப்போது அவர், குழந்தையின் இருதயத் துடிப்பு சீராக இருப்பதையும், குழந்தை சரியாக மூச்சு விடுவதையும் உறுதி செய்தார். பின்னர் அவர்,"என்னால் நம்பவே முடியவில்லை. ஆச்சரியத்தில் என்ன பேசுவதென்றே தெரியவில்லை.குழந்தை பிழைத்து விட்டது என்பது உண்மை'என்றார்.

ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் திக்கு முக்காடிப் போன கேட், இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறியதை அடுத்து, அதை மார்போடு அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டேன். என் வாயில் என்ன தோன்றியதோ அதை குழந்தையின் காதருகே, அழுகையுடன் கிசு, கிசுத்தேன். "உனக்கு ஜேமி என பெயர் வைத்திருக்கிறோம்; உனக்கு ஒரு சகோதரி இருக்கிறாள் தெரியுமா? நீ எங்களுக்கு வேண்டும்; உன்னை விட்டு எங்களால் பிரிந்து இருக்க முடியாது' என, கூறினேன்.

இரண்டு மணி நேரமாக, குழந்தையை மார்பில் வைத்துக் கொண்டு, அழுதபடி இருந்தேன். அப்போது திடீரென குழந்தையிடம் அசைவு தெரிந்தது. மெல்ல கண் திறந்து பார்த்தது. அதன் பிஞ்சுக் கரங்கள், என் கை விரல்களை மென்மையாக பற்றியபோது, எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இந்த நேரத்தில் இந்த உலகத்திலேயே மிக மகிழ்ச்சியான தாய், தந்தையர்கள் நானும், என் கணவரும் தான். இவ்வாறு கேட் உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்.

40 சவுக்கடி வாங்கிய மிஸ் யுனிவர்ஸ் ஆடை வடிவமைப்பு பெண் நிபுணர்.!

|


மிஸ் யுனிவர்ஸ் 2010 அழகிப்போட்டி அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அழகிகளுக்கு நீச்சல் உடை வடிவமைத்து கொடுத்தவர் ராச்சி (27).

இவர் ஈரான் தலைநகர் தெக்ரானை சேர்ந்தவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடினார்.

அப்போது கறுப்பு மினி ஸ்கர்ட, டி-சர்ட் மற்றும் ஹை கீல்ஸ் செருப்பு அணிந்திருந்தார். அதற்கு மேல் கறுப்பு நிற கவச உடை அணிந்திருந்தார். இது தங்கள் நாட்டு சட்டத்துக்கு எதிரானது என கூறி அவரையும், அவரது தோழிகளையும் போலீசார் கைது செய்தனர்.

ஆண்கள் அணியும் உடையை அவர் அணிந்திருந்ததாக குற்றம் சாட்டி அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர் செய்த குற்றத்துக்காக 40 சவுக்கடி வழங்கி தீர்ப்பு கூறப்பட்டது.

இதை தொடர்ந்து 5 நாட்கள் கழித்து தெக்ரானில் ராச்சிக்கு சவுக்கடி தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஒரு தனி அறையில் வைத்து ராச்சியை சவுக்கால் அடித்தனர்.

அந்த அறைக்கு முன்பு அவரது பெற்றோர் காத்து நின்றனர். சவுக்கடியை தாங்காமல் அவர் அலறியதை கேட்டும் சத்தமின்றி மவுனமாக கண்ணீர் வடித்தபடி நின்றனர்.

1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் கண்டுபிடிப்பு

|


மாஸ்கோ: ரஷ்ய உள்நாட்டு போரின் போது ரஷ்யாவை ஆண்ட கடைசி சார் மன்னரின் குடும்பத்திற்கு சொந்தமான 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் சைபீரியாவில் உள்ள பைகால் ஏரியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவில் மன்னராட்சி நடைபெற்ற காலங்களின் அவரது அரச வம்சத்தினை சார் என அழைப்பர்.

ரஷ்யாவில் உள்நாட்டுப்போர் ஏற்பட்ட போது சைபீரியாவும் ரஷ்யாவிற்கு கட்டுப்பட்டிருந்தது. சைபீரியாவில் அப்போதைய ராணுவ அட்மிரலாக இருந்த அலெக்ஸாண்டர்கோல்சோக் என்பவர் ரஷ்யாவிற்கு எதிராக உள்நாட்டு போரை அறிவித்தார்.ரஷ்யாவில் உள்நாட்டு குழப்பத்தினால் அந்நாட்டின் கடைசி சார் மன்னரிடமிருந்த பல ஆயிரம் கோடி மதிப்பிலான 16,00 டன் தங்கப்புதையலை கைப்பற்றி சைபீரியாவில் உள்ள உலகின் ஆழமான ஏரி என அழைக்கப்படும்

பைகால் ஏரியில் மறைத்து வைத்திருந்ததாகவும் ரஷ்யாவின் மிர்-2 என்ற நீர்முழ்கிக்கப்பல் மூலம் ஆராய்ச்சி மேற்கொண்டவர்கள் இத்தகைய தங்கப்புதையலை கண்டுபிடித்தனர். கண்டெடுக்கப்பட்ட தங்கப்புதையலை ஏரியின் பராமரிப்புப்பணிக்கு செலவிடப்படும் என சைபீரியா அறிவித்துள்ளது.

Welcome

Blog Archive