ஆக்ஸ்போர்டு டிக்ஸனரியின் அடுத்த பதிப்பு ஆன்லைனில் மட்டுமே.!!

| Tuesday, August 31, 2010


லண்டன்: ஆக்ஸ்போர்டு டிக்ஸனரியின் அடுத்த பதிப்பு ஆன்லைனில் மட்டுமே வெளியிடப்பட உள்ளது. உலகளவில் புகழ்பெற்றது இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் டிக்ஸனரி. இதுதமது மூன்றாவது பதிப்பை வெளியிட உள்ளது. ஏற்கனவே தனது முதல் பதிப்பை கடந்த 1928ம் ஆண்டும், இரண்டாவது பதிப்பை 1989ம் ஆண்டும் வெளியிட்டது. அதன்பின்னர் தற்போது மூன்றாவது பதிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளது.

ஆனால் இந்த முறை அதனை ஆன்லைனில் மட்டுமே வெளியிட முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக செய்திதொடர்பாளர் கூறுகையில் மாறிவரும் நவீன உலகில் தற்போது அனைத்தும் தகவல்களும் இன்டர்நெட் மூலம் பெறப்படுகிறது. ஆகையால் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் தனது மூன்றாவது பதிப்பு டிக்ஸனரியை ஆன்லைனில் வெளியிட உள்ளது. இதற்கான இணையதளம் www.oed.com ஆகும்.

மேலும் பல புதிய தகவல்களுடன் புதிய இணையதளம் தயாராகி வருகிறது. அதனை டிசம்பரில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். ஆன்லைன் தேவைகள் நிறைய இருந்தாலும் அச்சுவடிவிலான தேவைகளும் அதிமாக உள்ளது. அச்சுபதிப்பு குறித்து பரிசீலிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

டைனோசரை விட ஆப்பிள் பலமானதா.? படிச்சுப் பாருங்க.!!

|


டைனோசருக்கு பலம் அதிகமா அல்லது ஆப்பிளுக்கு பலம் அதிகமா என்று யாராவது கேட்டால், நாம் நிச்சயம் அவரைப் பார்த்து சிரித்திருப்போம்.

ஆனால், 60 மி்ல்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியை தாக்கிய மாபெரும் எரிகல்லால் ஏற்பட்ட பயங்கரமான சுற்றுச்சூழல் மாற்றங்கள் தான் (பல லட்சம் அணு குண்டுகள் வெடித்தால் ஏற்படும் அளவுக்கு சேதம் பூமியில் உண்டானது. அப்போது எழும்பிய தூசு மண்டலம், சூரிய ஒளியை பல்லாண்டுகள் மறைத்ததால் உலகின் பெரும்பாலான தாவரங்கள் அழிந்து, அதை நம்பி வாழ்ந்த மிருகங்களையும் அழித்தது, குறிப்பாக டைனோசர்களை கூண்டோடு ஒழித்துக் கட்டியது என்பது தியரி) டைனோசர்களை அழிந்தன.

ஆனால், அதில் தப்பிப் பிழைத்த ஒரு சில தாவர வகைகளில் ஒன்று ஆப்பிள் என்பது சமீபத்திய 'ஜீனோம்' ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

ஆப்பிளின் சுமார் 600 மில்லியன் அடிப்படை டிஎன்ஏக்களை சமீபத்தில் அக்குவேறு ஆணிவேறாக வகைப்படுத்தி (genome profiling) முடித்துள்ளனர் நியூசிலாந்து விஞ்ஞானிகள்.

ஆப்பிளின் நிறம், சுவை, அதன் ஜூஸ் தரும் தன்மைக்கான காரணங்களை ஆராய்வதற்காகவும், இந்த குணங்களை அதிகரித்து மிகச் சுவையான ஆப்பிள்களை உருவாக்குவதற்காக நடத்தப்பட்ட ஆராய்ச்சி தான் இது. ஆனால், இந்த ஆராய்ச்சி நம்மை டைனோசர்களின் கதையை நோக்கி கொண்டு போயுள்ளது.

ஆப்பிள்களுக்கு மிக நெருக்கமான இனத்தைச் சேர்ந்த ஸ்ட்ராபெர்ரி உள்ளிட்ட தாவர வகைகளில் 7 அல்லது 8 குரோமோசோம்கள் தான் உள்ளன. (நமது ஜீன்களை ஏந்திய டிஎன்ஏக்களைக் கொண்ட செல் உறுப்பு தான் குரோமோசோம்). ஆனால், ஆப்பிள்களில் 17 குரோமோசோம்கள் உள்ளது சமீபத்திய 'ஜீனோம்' ஆராய்ச்சியில் (டிஎன்ஏக்களை வரிசைப்படுத்தல்) தெரியவந்துள்ளது.

ஆப்பிளின் தற்காப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்ட இந்த குரோமோசோம்கள் இரண்டு முறை உருவாகியுள்ளன. அதாவது 'டூப்ளிகேட்' ஆகியுள்ளன. இதனால் தான் ஆப்பிள் குடும்பத்தைச் சேர்ந்த பிற தாவரங்களில் 8 குரோமோசாம்கள் இருக்க, ஆப்பிளில் மட்டும் 17 குரோமோசாம்கள் உள்ளன.

இந்த டூப்ளிகேசன் நடந்தது 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன். அந்த சமயததில் தான் பூமியில் இன்னொரு முக்கிய நிகழ்வும் நடந்தது. அந்த காலகட்டத்தில் தான் டைனோசர்கள் கூண்டோடு காலியாயின.

இந்த இரு தனித்தனி சம்பவங்களுக்கும் ஒரே காரணம் இருந்திருக்கலாம் என்பது தான் விஞ்ஞானிகள் சொல்லும் சுவாரஸ்யமான தகவல்.

எரிகல் தாக்கி தாவர இனங்கள் அழிந்தபோது, தாக்குப் பிடித்த ஓரிரு இனங்களில் ஆப்பிளும் ஒன்று என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியாளர்கள். அந்த காலகட்டத்தில் தப்பிப் பிழைக்க, ஆப்பிள் இனத்தில் நடந்த 'சம்பவம்' தான் குரோமோசாம் டூப்ளிகேஷன் என்கிறார்கள்.

கவர்ச்சி உடைகளால் வேலைக்கு ஆபத்து.!!

|


லண்டன்: நேர்காணலுக்கு செல்வோர் தங்கள் மிடுக்கை வெளிக்காட்டுவதற்கு ஏற்ற ஆடைகளை அணிவது வழக்கம். நேர்காணல் நடத்துவோரை கவர, கவர்ச்சியாக உடை அணிந்து செல்லும் பெண்களும் உண்டு. இதனால், வேலைக்கான வாய்ப்பு அதிகரிப்பதாக ஒரு மாயை நிலவியது. அதுவே தற்போது ஆபத்தாக மாறியுள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்தில் 2 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடந்தது. அதன் விவரம்: நேர்காணலுக்கு செல்வோர் மிடுக்கான ஆடைகள் அணிந்தால் கூடுதல் வாய்ப்பு கிடைக்கக்கூடும். பெண்கள் அணியும் உடையில் கவர்ச்சி அளவோடு இருந்தால் நல்லது. அதுவே, அதிகமானால் வேலை கிடைக்கும் வாய்ப்பு குறைந்து விடுகிறது.

இதுபோன்ற உடைகளால் தவறான எண்ணம் ஏற்படுவதே காரணம். ஆண்களை பொருத்தவரை இஸ்திரி செய்யாத சட்டை, கனமான பேன்ட், பொருந்தாத டை போன்றவற்றை அணிந்து செல்வதால் புறக்கணிக்கப்படுவோர் அதிகம்

நோக்கியாவில் டவுன்லோட்: மைக்கேல் ஜாக்சன் முதலிடம்.!!

| Sunday, August 29, 2010


உலக அளவில் நோக்கியாவின் ஓவி மியூசிக் ஸ்டோர் மூலம் டவுன்லோட் செய்யப்படும் பாடல்களில் மறைந்த உலக பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் முதலிடம் வகிக்கிறார். மைக்கேல் ஜாக்சனின் பாடல்களை இந்தியர்களே அதிகளவில் டவுன்லோட் செய்துள்ளனர். மைக்கேல் ஜாக்சனில் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படும் வேளையில், அவரது இறப்பிற்கு பிறகு அவர் பெற்றுள்ள புகழ் குறித்த ஆய்வு லண்டனில் நடத்தப்பட்டது.

ஜாக்சன் இறந்து ஓராண்டு நிறைவடைந்த பின்னரும் அவரது பாடல்களை ரசிகர்கள் தேடிப்பிடித்து டவுன்லோட் செய்து வருகின்றனர். இந்தியாவில் மட்டும் 26 சதவீதம் பேர் மைக்கேல் ஜாக்சனின் பாடல்களை டவுன்லோட் செய்துள்ளனர்.இது தவிர லண்டன், ஜெர்மனி, ‌நெதர்லாந்து, ஃபின்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் அதிகளவில் ஜாக்சனின் பாடல்களையும், வீடியோக்களையும் டவுன்லோட் செய்துள்ளனர்.

"ஐபாட்'களை தொடர்ந்து பயன்படுத்தினால் கேட்கும் திறன் பாதிக்கப்படும்.!!

|


"ஐபாட்'களை அதிகம்பயன்படுத்துவதால், இளைஞர்களுக்கு காதுக் கோளாறுஏற்படுவதாக அமெரிக்காவில் நடத்திய ஆய்வில்தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மருத்துவ கழகத்தால் நடத்தப்படும் பத்திரிகையில், ஐபாட், வாக்மேன் போன்ற கருவிகளைகாதில் பொருத்தி கொள்வதால் ஏற்படும் விளைவுகள்குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவு பற்றியசெய்தி வெளியிடப் பட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:அமெரிக்க மருத்துவ கழகத்தின் உதவியுடன் இதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த 1990லிருந்து,நீண்ட கால ஆய்வாக இதுநடத்தப்பட்டது. "ஐபாட்'பயன்படுத்தும் 12 வயதில்இருந்து 19 வயதுக்குட்பட்ட "டீன்-ஏஜ்' பருவத்தினரின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தன.முதல் கட்ட ஆய்வில்,"ஐபாட்' போன்ற கருவிகளை காதில் பொருத்தி,பாட்டுக் கேட்கும் இளைஞர்களில் 15 சதவீதம்பேருக்கு காது பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது.இரண்டாம் கட்ட ஆய்வில், இந்த எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. 20 சதவீதம் பேருக்குகாதில் பாதிப்பு ஏற்பட்டு,அவர்களின் கேட்கும் திறன்குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.இவ்வாறு அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாஸ்டனில்உள்ள பிரபல மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் ஜோசப் கூறியதாவது:"ஐபாட்'களைதொடர்ந்து பயன்படுத்தும்இளைஞர்களுக்கு, ஆரம்பத்தில் தங்கள் காதில்பிரச்னை ஏற்படுவது தெரியாது. சில காலம் கழித்து தான்இதை உணர முடியும். குறிப்பாக, வகுப்பறைகளில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது, அவர் கூறுவதை பின்பற்ற முடியாமல்திணறும் சூழ்நிலை ஏற்படும். இதனால், அவர்களின்கற்கும் திறன் பாதிக்கப்படும். "ஐபாட்'டைதொடர்ந்து பயன்படுத்துவதால், எத்தகைய விளைவுஏற்படும் என்பதை, தற்போதுள்ள இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு ஜோசப்கூறினார்.

புற்றுநோய்க்கான 8 அறிகுறிகள் விஞ்ஞானிகள் தகவல்.!!

| Saturday, August 28, 2010


உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றாக புற்றுநோய் திகழ்கிறது. அதற்கான அறிகுறிகளை இங்கிலாந்தில் உள்ள கிலே பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். அவை, ரத்தம், சிறுநீர், ரத்தசோகை மற்றும் உடல் தளர்வு போன்றவற்றுடன் சம்பந்தப்பட்டதாகும். பொதுவாக 200 வகையான புற்றுநோய்கள் உள்ளன.

இதில் குறிப்பாக மலக்குடலில் இருந்து ரத்தம் வெளியாகுதல், இருமலின் போது ரத்தம் வெளிவருதல், மார்பகத்தில் கட்டி அல்லது வீக்கம், எச்சில் மற்றும் உணவு விழுங்க மிகவும் சிரமப்படுதல், காலம் கடந்து மாதவிடாய் வருதல், சுரப்பிகள் சரி வர வேலை செய்யாமல் இருத்தல் உள்ளிட்ட 8 அறிகுறிகள் புற்றுநோய்க்கான தொடக்கம் என்று தெரிவித்துள்ளனர்.

மேற்கண்ட அறிகுறிகள் தெரிந்தால் உடனே, டாக்டரை சந்தித்து தங்கள் உடலை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர். இது ஒரு முன் எச்சரிக்கை மட்டுமே என்று தெளிவுப்படுத்தி உள்ளனர்.

விண்வெளியின் மேற்பரப்பு சுருங்குகிறது.!! அதிர்ச்சி தகவல்.!

|


குளிர்ச்சியின் காரணமாக சந்திரனின் அளவு மிக மெதுவாக சுருங்கி வருவதாக சமீபத்தில் நடத்திய ஆய்வு வெளிப்படுத்தியது. இந்த நிலையில் தற்போது விண்வெளியின் மேற்பரப்பும் சுருங்கி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்

அமெரிக்காவில் ஜியோ பிசிக்கல் ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை சூரியனின் செயல்பாடு வழக்கத்தை விட குறைவாக இருந்தது

இதனால் பூமியில் இருந்து 55 மைல் முதல் 300 மைல் வரை உள்ள விண்வெளி குளிர்ச்சி காரணமாக சுருங்கிவிட்டதாக கூறியுள்ளனர். உலக மக்களுக்கு இது அச்சுறுத்தலான செய்தி ஆக இருந்தாலும் செயற்கை கோள்களுக்கு இது இனிப்பான செய்தியாகும்

ஏனேனில் செயற்கைகோள்கள் விண்வெளியில் நீண்ட நாட்கள் தங்கியிருந்து பூமியை சுற்ற முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

புற்று நோய், இதய அடைப்பை நீக்கும் கல்லீரல் “திசு” தயாரிப்பு.!! விஞ்ஞானிகள் சாதனை.!!

| Friday, August 27, 2010


ஆண்டு தோறும் கல்லீரல் நோயினால் ஆயிரக்கணக்கானோர் மரணம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக புற்று நோய், இருதய அடைப்பு, வலிப்பு மற்றும் மூச்சு திணறல் போன்ற நோய்களால் அவதிப்படுகின்றனர்.

இந்த நோய்களை கல்லீரல் திசுக்களால் குணப்படுத்தி வருகின்றனர். எனவே, அவற்றை பல வழிகளில் தயாரித்து வருகின்றனர். தற்போது இவற்றை மனித தோலில் இருந்து தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். மனித தோலில் இருந்து “நீபுரோகிமிடு” திசுக்கள் எடுக்கப்பட்டு அதன் மூலம் கல்லீரல் திசுக்கள் உருவாக் கப்பட்டுள்ளது.

இந்த தகவலை கேம்பிரிஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மருத்துவ கண்டுபிடிப்பு இதழில் வெளியிட்டுள்ளனர்.

இதற்கு முன்பு “கருஸ்டெம்” திசுக்களின் மூலம் கல்லீரல் நோய்கள் குணப்படுத்தப்பட்டு வந்தது. தற்போது அமெரிக்காவில் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மனித தோலில் இருந்து கல்லீரல் திசு தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

செயற்கை கரு விழிகள் மூலம் கண் பார்வை: விஞ்ஞானி சாதனை.!!

|


கண்பார்வை பறிபோனால் வேறு ஒருவரிடம் தானமாக பெற்ற கருவிழிகள் மூலம் மீண்டும் பார்வை பெற்று வருகின்றனர். தற்போது செயற்கை கருவிழிகள் மூலம் பார்வை பெற செய்து ஒரு பெண் விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார்.

அவரது பெயர் மேகிரிப்த். இவர் சுவீடனில் உள்ள லிங் கோபிங் பல்கலைக்கழகத்தில் இதற்கான ஆய்வு மேற்கொண்டார்.

இவர் மனித திசுக்களை அல்லது இணைப்பு திசுவின் வெண் புரதம் (காலோஜென்) போன்றவற்றை ஆய்வகத்தில் செயற்கையாக வளரச்செய்தார். அதை கண்களில் பொருத்தும் காண்டேக்ட் லென்ஸ் போன்று வடிவமைத்தார்.

பின்னர் பார்வை இல்லாதவர்களுக்கு அதை பொருத்தி பார்வை பெற செய்தார். இது மருத்துவ உலகின் மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது.

தற்போது கருவிழி பாதிப்பினால் உலகில் சுமார் 1 கோடி மக்கள் பார்வை இழந்து இருளில் தவிக்கின்றனர். இந்த கண்டுபிடிப்பின் மூலம் அவர்களின் வாழ்வில் மீண்டும் ஒளிபரவும் என்பதில் சந்தேகமில்லை.

சூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம்.!!

| Thursday, August 26, 2010


ஜெனீவா : சூரியனை சுற்றியுள்ள வட்டப் பாதைக்கு வெளியே சூரியன் அளவுக்கு புதிய கிரகம் இருப்பதையும், இதுவரை இல்லாத மிகச் சிறிய கோள் உட்பட 7 புதிய கோள்களையும் சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுபற்றி ஜெனீவாவில் இரோப்பியன் சதர்ன் அப்சர்வேடரி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியதாவது: சூரிய சுற்றுப் பாதைக்கு வெளியே சூரியனைப் போன்ற, அதே அளவில் கிரகம் ஒன்று இருப்பது விண்வெளி ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. அந்த புதிய கோளின் சுற்று பாதையில் 7 கிரகங்கள் உள்ளன. அதில் ஒரு கிரகம் மிகச் சிறியது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களில் மிகச் சிறியதான அது விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியம் அளித்துள்ளது.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிரகங்களில் பெரும்பாலானவை பூமியை விட 13 முதல் 25 மடங்கு பெரியவை. ஒரே ஒரு கிரகம் மட்டுமே பூமியைப் போல 1.4 மடங்கு உள்ளது. பூமியை தவிர்த்து சூரிய மண்டலத்திலும், அதற்கு வெளியிலும் உள்ள கோள்களில் இதுவே மிகச் சிறியது என கருதப்படுகிறது. ‘‘புதிய கிரகங்கள் அனைத்தும் பாறைகள், பனிக்கட்டிகளால் ஆனவை. அவை உறுதியானவை. அதன் மேற்பகுதியில் ஹைட்ரஜன், ஹீலியம் வாயு இருக்கலாம். இந்த கிரகங்களில் உயிரினம் வசிக்க வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை’’ என்று ஒரு விஞ்ஞானி தெரிவித்தார்

விண்வெளியில் 553 நாட்கள் உயிர்வாழும் பாக்டீரியாக்கள்: விஞ்ஞானிகள் தகவல்.!!

| Wednesday, August 25, 2010


ஆக்சிஜன் இல்லாத இடத்தில் பாக்டீரியாக்கள் எத்தனை நாட்கள் உயிர்வாழும் என விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதற்காக இங்கிலாந்தில் தெற்கு கடற்கரையில் உள்ள ஒரு மலையின் செங்குத்தான பாறையில் இருந்து சில பாக்டீரியாக்களை சேகரித்தனர்.

அவற்றை ஆக்சிஜன் இல்லாத விண்வெளிக்கு எடுத்து சென்றனர். அங்கு வைத்து சோதனை செய்தனர். அப்போது அந்த பாக்டீரியாக்கள், 553 நாட்கள் உயிருடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை அல்ட்ரா லைட்கள், காஸ்மிக் கதிர்கள் ஒளிவீச்சில் விண்வெளியில் உள்ள தட்ப வெப்பநிலையில் உயிர் வாழும் தன்மை உடையது என்றும் கண்டறிந்தனர்.

இந்த ஆய்வு கடந்த 2008 ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம் பாக்டீரியாக்கள் விண்வெளி வீரர்களின் உபயோகத்துக்கு பயன்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Welcome

Blog Archive