ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக மாறியது எப்படி..?

| Monday, July 25, 2011


சாதரண ரஜினிகாந்தாக இருந்தவர், சூப்பர் ஸ்டாராக மாறியது எப்படி? என்ற ரகசியத்தை உடைத்திருக்கிறார் பழம்பெரும் இயக்குனரான இயக்குனர் எஸ்.பி.முத்துராமன். இவர் ரஜினிகாந்தை வைத்து 20 படங்களுக்கும் மேல் இயக்கியவர் ஆவார்.

நடிகர் ரஜினிகாந்த் பூரண குணமடைந்து திரும்பியதையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா திருப்பூரில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட எஸ்.பி.முத்துராமன் பேசியதாவது;

ரஜினி ரசிகர்களின் பொது நல சேவைகள் தொடர வேண்டும். அவர்கள் ரஜினியின் புகழ் பாடுவதை விட அவர் பெயரில் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். ரஜினிகாந்த் விரைவில் அனைத்து மாவட்ட தலைநகரங்களுக்கும் வந்து மாநாடு நடத்தி ரசிகர்களையும், பொது மக்களையும் நேரில் சந்திக்க உள்ளார்.

ரஜினியை தெய்வங்கள் காப்பாற்றியது என்று கூறுவதை விட ரஜினிக்காக சிறப்பு பூஜைகள், பிரார்த்தனை செய்த ரசிகர்கள் தான் தெய்வங்கள். ரசிகர்களின் பிரார்த்தனையால் தான் ரஜினி குணமடைந்து உயிர் வாழ்கிறார்.

ரஜினிகாந்த் கேமிராவிற்கு முன்பு நன்றாக நடிப்பார். கேமிராவுக்கு பின்னால் மற்றவர்களை போல அவருக்கு நடிக்க தெரியாது. அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டாராக இருக்க முடிகிறது. தன்னை தியாகம் செய்து அர்ப்பணிப்பவர்கள் தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். வாழ்க்கைக்கு ரோல் மாடலாக வாழ்ந்து வருபவர் ரஜினிகாந்த்.” என்றார்.



THE HOT BARE BACK BEAUTIES - IMAGES மேலும் பார்க்க‌

0 comments:

Post a Comment

Welcome